மண்வாசனை உருவாவது எப்படி?
This audio is generated by an AI tool.
முதல் சொட்டு மழை....காய்ந்த நிலத்தில் விழும்போது எழும் வாசனை..
வெயில் தணிந்த அந்நேரத்தில்
உருவாகும் மண்வாசனையை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.
ஆனால் அது எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி சிந்தித்ததுண்டா?
geosmin எனும் ஒருவகை மூலக்கூறின் (molecule) வாசனைதான் நாம் அனுபவிக்கும் மண்வாசனைக்குக் காரணம் என்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள்.
மழைத்துளிகள் மண்ணில் விழும்போது அதில் இருக்கும் geosmin வெளியாகி காற்றில் கலக்கிறது.
அதே சமயத்தில் செடிகளின் வாசத்துக்குக் காரணமாக இருக்கும் terpenes ரசாயனம், மழைத்துளிகள் இலைகளில் விழும்போது காற்றில் கலக்கின்றன.
Geosmin-உம் terpenes-உம் ஒன்றாக காற்றில் கலப்பதால் நாம் உணரும் மண்வாசனையின் நறுமணமும் அதிகரிக்கிறது.
மன்வாசனை உருவாக மின்னலுக்கும் ஒரு பங்கு உண்டு.
மின்னலினால் உருவாகும் ozone வாசமும் காற்றில் கலந்துவிடுகிறது.
மேலும் மழை பெய்யும்போது காற்றில் உள்ள தூசியும் இதர மாசுத்துகளும் தரையில் விழுந்துவிடுகின்றன....காற்றின் தரம் கூடுகிறது.
அதுவும் நாம் மண்வாசனையை எளிதில் உணரக் காரணமாகிறது.
விலங்குகளைவிட மனிதர்களுக்கு அந்த வாசனையை நுகர்ந்திடும் ஆற்றல் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
1960-கள் முதலே இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மண்வாசனையை வைத்து வாசனைத் திரவங்கள் தயாரிக்கப்படுவதாய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று வரையிலும் வாசனைத் திரவங்களின் தயாரிப்பில் geosmin பயன்படுத்தப்பட்டு வருகிறது.