Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகின் ஆக உயரமான எவரெஸ்ட் மலை... இன்னும் வளர்கிறதா?

வாசிப்புநேரம் -
உலகின் ஆக உயரமான மலை எவரெஸ்ட் மலை.

கடல் மட்டத்துக்கு மேல் 8.85 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் அது இன்னும் வளர்ந்துகொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மலையின் அருகில் இருக்கும் கோசி (Kosi) நதியும் அருண் நதியும் சுமார் 89,000 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்ததால் எவரெஸ்ட் மலையின் உயரம் சுமார் 15 முதல் 50 மீட்டர் அதிகரித்ததாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.

அந்தப் போக்கு 'isostatic rebound' என்று அழைக்கப்படுகிறது.

பூமியின் மேற்பரப்பிலிருந்து பனிக்கட்டி, அரிக்கப்பட்ட பாறைகள் போன்ற பாரங்கள் அகற்றப்படும்போது அதன் கீழ் இருக்கும் நிலம் மெதுவாக உயர்கிறது.

இமாலயப் பகுதிகளில் மட்டுமின்றி பூமியின் மற்ற பகுதிகளையும் 'isostatic rebound' பாதிக்கிறது.








 
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்