Movember என்ற November - ஏன்?
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நவம்பர் மாதம் Movember என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஆண்களின் மனநலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாதமாக அமைகிறது.
இயக்கத்துக்கு அடையாளமாக ஆண்கள் நவம்பர் மாதத்தில் மீசை வைத்துக்கொள்வதைப் பழக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது South China Morning Post ஊடகம்.
பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஆண்களின் மனநலம் சரிந்துவருவது தெரிவதாக ஊடகம் கூறியது.
அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 30 முதல் 34 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களின் மனநலம் 85 விழுக்காடு சரிந்துள்ளது.
அமெரிக்க ஆண்கள் சீக்கிரம் மரணமடைய தற்கொலை 4-ஆவது முக்கிய காரணமாக இருக்கிறது.
தற்கொலையால் மடியும் நிலை பெண்களைவிட ஆண்களிடம் 3.6 மடங்கு அதிகம் காணப்படுவதாக Movember இயக்கம் கூறுகிறது.
ஹாங்காங்கிலும் (Hong Kong) 2020-க்குப் பிறகு தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2024-இல் இந்த எண்ணிக்கை 100,000 ஆண்களுக்குச் சுமார் 21-ஆக இருந்தது.
ஆண்கள் வலிமையாக இருக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு உதவி தேவையில்லை என்றும் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலைமை இதற்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார் ஹாங்காங் உளவியல் சங்க ஆலோசகர் ஒருவர்.
இதனால் ஆண்கள் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்குகின்றனர்.
இதனைக் கையாள ஆண்களை ஆண்கள் ஆதரிக்கும் குழுக்கள் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆதாரம் : South China Morning Post