உயிரைக் காப்பாற்றியவரைச் சந்திக்க 16,000 கிலோமீட்டர் பயணம்
வாசிப்புநேரம் -
படம்: Caters Photographic
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் (Melbourne) நகரைச் சேர்ந்த ஆடவர் தமது உயிரைக் காப்பாற்றியவரைச் சந்திக்க 16,000 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார்.
31 வயது திரு லியூக் மெல்லிங் (Luke Melling) அரிய வகை ரத்தப் புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டிருந்தார்.
உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு மூல உயிரணு (stem cell) மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
ஆனால் அவரது மூல உயிரணு குடும்பத்தாரின் மூல உயிரணுக்களுடன் பொருந்தவில்லை. ஆஸ்திரேலியாவிலும் பொருத்தமான மூல உயிரணு உடையவர்களை அடையாளம் காணமுடியவில்லை என்று BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
6 மாதங்களுக்குப் பிறகு பிரிட்டனின் லிங்கன்ஷியர் (Lincolnshire) பகுதியைச் சேர்ந்த திரு அலெஸ்ட்டர் ஹாக்கனுடைய (Alastair Hawken) மூல உயிரணு
திரு மெல்லிங்க்குப் பொருந்தும் என்று கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டுத் திரு மெல்லிங் உயிர்பிழைத்தார்.
இருவரின் மூல உயிரணுக்களும் 100 விழுக்காடு பொருந்தியிருந்ததாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மேலும் இருவரின் குடும்பங்களும்
பிரிட்டனின் பிரஸ்ட்டன் (Preston) நகரைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
எனவே தாங்கள் தூரத்து உறவினர்களாக இருக்கக்கூடும் என்று இருவரும் நம்புகின்றனர்.

ஆதாரம் : Others/BBC