Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

N95 முகக்கவசம்... நீண்டநேரம் அணியலாமா?

வாசிப்புநேரம் -

கிருமிப்பரவல் சூழலில் முகக்கவசம் அணிவதைப் பல உலக நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன. 

முகக்கவசங்களில் பலவகை உண்டு.

கிருமித்தொற்றிலிருந்து சிறந்த பாதுகாப்பு வழங்கக்கூடிய முகக்கவச வகைகளில் ஒன்று N95. 

ஆனால் அவ்வகை முகக்கவசம் வீணாகும்வரை அதை எத்தனை மணிநேரம் அணியலாம் என்ற கேள்வி பலரிடையே இருக்கக்கூடிய ஒன்று. 

N95 முகக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள வடிகட்டி (filter) செயலிழப்பதற்கு நாள் எடுக்கும். அதனால் அந்த வகையான முகக்கவசத்தைச் சில நாள்களுக்கு அணியலாம் எனக் கூறப்படுகிறது. 

பொதுவாகப் பலரும் அதை அதிகபட்சமாக 40 மணிநேரம் அணிவர். அதையும் தாண்டி அதே N95 முகக்கவசத்தை அணியும்போது அதிலிருக்கும் கயிற்றில் வியர்வை சேரலாம் அல்லது அது அறுந்துவிடலாம் என்று நிபுணர்கள் சிலர் சுட்டியுள்ளனர். 

மருத்துவ ஊழியர்கள் முடிந்தவரை முகக்கவசங்களை அடிக்கடி மாற்றும்படிப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் நோய்த்தொற்று ஏற்படுவதை அந்தப் பழக்கம் தடுக்கும். 

முன்பு N95 முகக்கவசங்களின் விலை மிகக் குறைவாக இருந்தது. ஆனால் அண்மைக்காலத்தில் அதற்கான தேவை அதிகரித்துள்ளதால் விலையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 

எனவே அமெரிக்காவிலும் மற்ற சில உலக நாடுகளிலும் சுகாதாரப் பிரிவுகள் அவற்றின் ஊழியர்களுக்கு இலவசமாக N95 முகக்கவசங்களை வழங்குகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்