நாசா புதிய விண்வெளித் தொலைநோக்கி
வாசிப்புநேரம் -
படம்: NASA
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான
நாசா புதிய விண்வெளித் தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது.
அதன் பெயர் ‘நான்சி கிரேஸ் ரோமன்’ (Nancy Grace Roman).
பிரபஞ்சத்தின் ஆழமான பகுதிகளை மிகத் துல்லியமாக ஆய்வுசெய்ய அது உதவும்.
'நான்சி கிரேஸ் ரோமன்' தொலைநோக்கி வானியல் ஆய்வில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்.
பிரபஞ்சத்தின் இருண்ட பக்கம், அதில் உள்ள பொருள்கள், ஆற்றல் ஆகியவற்றை ஆராயப் புதிய தொலைநோக்கி வழியமைக்கும்.
அது ஹபள் (Hubble) தொலைநோக்கியைவிட 100 மடங்கு பரந்த பார்வையைக் கொண்டது.
விண்வெளியை 1,000 மடங்கு வேகத்தில் மிக விரிவாக ஆய்வு செய்யும் திறன் அதற்கு உண்டு.
Goddard Space Flight Center எனப்படும் நாசாவின் ஆய்வுக் கூடத்தில் புதிய தொலைநோக்கி ஒன்றுசேர்க்கப்படுகிறது.
அதில் மாசு படியாமல் இருக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகச் சொல்கிறார் நாசா திட்ட மேலாளர்.
விண்வெளியில் உள்ள 20 பில்லியனுக்கும் மேற்பட்ட பொருள்களை ஆராய ஆய்வாளர்கள் முனைகின்றனர்.
சூரியக் குடும்பத்தைப் போன்ற பிற அமைப்புகள், அங்கு உயிரினம் வாழ்வதற்கான சாத்தியம் ஆகியவற்றைக் கண்டறிய முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
வரும் செப்டம்பரில் புதிய தொலைநோக்கியை விண்ணில் செலுத்துவதற்கான முயற்சி தொடர்கிறது.

ஆதாரம் : Others