Skip to main content
விண்ணுக்குப் புதிய தொலைநோக்கியை அனுப்பிய அமெரிக்கா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

விண்ணுக்குப் புதிய தொலைநோக்கியை அனுப்பிய அமெரிக்கா

வாசிப்புநேரம் -
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் விண்ணுக்குப் புதிய தொலைநோக்கியை அனுப்பிவைத்திருக்கிறது.

முதன்முறையாக விண்ணை முழுமையாகப் பார்க்க அது வாய்ப்பளிக்கும்.

SpaceX நிறுவனம், Spherex எனும் தொலைநோக்கியைக் கலிபோர்னியாவிலிருந்து பாய்ச்சியது.

அந்தத் தொலைநோக்கி பூமியின் துருவங்களை வலம் வரும்.

பூமியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத எண்ணிலடங்கா விண்மீன்களைக் கண்முன்னே கொண்டுவரும்.

பிரபஞ்சத்தை 102 வண்ணங்களில் படமெடுத்துக் காட்டும்.

6 மாதத்துக்கு ஒரு முறை அது அண்டத்தின் வரைபடத்தை உருவாக்கும்.

ஈராண்டுக்கு இந்த முயற்சி தொடரும்.

கிடைக்கும் நான்கு வரைபடங்களை அறிவியல் அறிஞர்கள் ஓராண்டுகாலம் ஆராய்ந்த பிறகு ஆய்வு முடிவுகளை வெளியிடுவர்.

விண்மீன் மண்டலங்கள் எவ்வாறு உருவாயின, எப்படியெல்லாம் மாற்றியிருக்கின்றன, அண்டம் எப்படி விரிவடைந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளமுடியும்.

தொலைநோக்கியோடு பயணப் பெட்டி அளவுகொண்ட 4 துணைக்கோளங்களும் விண்ணுக்குப் பாய்ச்சப்பட்டிருக்கின்றன.

குறிப்பாகச் சூரியனைப் பற்றிய புதிய தகவல்களைத் திரட்ட அவை உதவும்.
ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்