வாழ்வியல் செய்தியில் மட்டும்
பண்டைய காலச் சீனர்கள், ஜப்பானியர்களைச் சித்திரிக்கும் தோட்டம்

சிங்கப்பூரில், பண்டைய காலச் சீனர்களையும், ஜப்பானியர்களையும் சித்திரிக்கும் தோட்டங்கள் உண்டு.
சீனாவில் கட்டப்பட்டுள்ள பாரம்பரியக் கோபுரங்கள் கொண்ட கட்டடங்களைப் போலவே சீனத் தோட்டத்தில் உள்ளவையும் கட்டப்பட்டுள்ளன.
அதைப் போலவே, ஜப்பானின் பாரம்பரிய அம்சங்களை மையமாகக் கொண்டு ஜப்பானியத் தோட்டம் அமைக்கப்பட்டது.
சீனத் தோட்டம் / ஜப்பானியத் தோட்டம்:

- ஆங்கிலப் பெயர்: Chinese Garden / Japanese Garden
- பரப்பளவு: 13.5 ஹெக்டர்
- முகவரி: 50 யுவான் சிங் ரோடு
சீனத் தோட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:

- கல் சிங்கங்கள்
- வெண்ணிறப் பாலம்
- கல்லால் செய்யப்பட்ட கப்பல்
- தேநீர் அருந்தும் இடம்
- பகோடா கட்டடம் (7 மாடிகள்)
- பொன்சாய் (Bonsai) பூங்கா
ஜப்பானியத் தோட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:

- அல்லி மலர்கள், இலைகள் நிரம்பிய அழகிய குளம்
- ஓய்வெடுப்பதற்கான இடம் (அதற்கு முன்னால் பல்வேறு செடிகள்)
- பூக்கள் நிறைந்த இடங்கள்
Chinese Garden MRT நிலையத்திற்கு முன்னால் அந்த இரு தோட்டங்களும் இருப்பதால், செல்வதும் எளிது.
தோட்டங்களில் என்ன செய்யலாம்?

- முழு நிலவை ரசிக்கலாம்
பௌர்ணமியன்று இரண்டு பூங்காக்களிலிருந்தும் நிலவைத் தெளிவாகக் காணலாம். அதனைப் படமும் எடுக்கலாம்.
- உல்லாசமாக நடக்கலாம்
இரு பூங்காக்களிலும் பலர் உல்லாசமாக நடந்து செல்வதைக் காணலாம். அமைதியும் இயற்கையும் நிறைந்த பூங்காக்களில் நடக்கும் போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவிலோ ஜப்பானிலோ நடப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
- புத்தகம் வாசிக்கலாம்
பூங்காக்களில் பொருத்தப்பட்டுள்ள மேசை நாற்காலிகளைப் பயன்படுத்தி அமைதி நிறைந்த சூழலில் புத்தகம் வாசிக்கலாம்.
ரம்யமான சூழலில் கண்களுக்கு இயற்கைக் காட்சிகளை விருந்தளித்தவாறு பொழுதைக் கழிக்கலாம்.