வாழ்வியல் செய்தியில் மட்டும்
சிங்கப்பூர்ப் பூங்காவில் கிரானைட் மலையா?

(படங்கள்: NParks)
சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் மலை கூட இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? சிங்கப்பூர் சிறிய நாடாக இருப்பினும், அதில் சில பிரம்மாண்டமான இயற்கை அம்சங்கள் உள்ளன.
லிட்டல் குவிலின் (Little Guilin):
ஆங்கிலப் பெயர்: Little Guilin
பரப்பளவு: 42 ஹெக்டர்
முகவரி: புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 5
சில தகவல்கள்:
குவிலின் என்பது சீனாவில் உள்ள ஒரு நகரின் பெயர். அதைப் போலவே இருப்பதால் பூங்காவுக்கு இந்தப் பெயர்.
பூங்கா புக்கிட் கொம்பாக் MRT நிலையத்தின் அருகில் உள்ளது. உள்ளூர் நாடகங்களின் சில காட்சிகளில் நீங்கள் பூங்காவைப் பார்த்திருப்பீர்கள்.

- கிரானைட் மலை
- குவாரி
- பூங்காவின் முகப்பில் இன்னொரு பூங்கா (பாத்தோக் டவுன் பூங்கா) உள்ளது

பூங்காவில் என்ன செய்யலாம்?
- படங்கள் எடுப்பது/ திருமணப் படங்கள் எடுப்பது
பூங்காவின் கிரானைட் மலை படங்களின் பின்புறத்தில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும்;
குவாரியில் உள்ள நீர் பார்ப்பதற்குப் பளப்பளப்பாக ஏரி போன்று இருக்கும்.
இந்த அம்சங்களுடன் படம் எடுக்கும் போது சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் இருப்பது போன்று படங்கள் காட்சியளிக்கும்.
-இயற்கையை ரசிப்பது
இப்பூங்காவில் காணப்படும் கிரானைட் மலை போன்ற இயற்கை அம்சங்கள் சிங்கப்பூரில் மற்ற பூங்காக்களில் இல்லை. அதைக் கண்டு ரசிக்கும் போது மனத்தில் ஒருவித அமைதி ஏற்படும்.

-குடும்பத்துடன் நடப்பது / உடற்பயிற்சி செய்வது
42 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவின் நடைபாதை நீளமானது. அதில் நடக்கலாம், மெதுவோட்டம் போகலாம் மற்ற உடற்பயிற்சிகளையும் செய்யலாம்.
இயற்கையை ரசித்தவாறே உடற்பயிற்சி செய்வதில் தனி இன்பம் பெறலாம்!