Netflix, Disney+ - பொதுத் தொலைக்காட்சிகளின் விளம்பர வருவாய்க்குப் பெரும் சவாலாக இருக்கப்போகின்றன
Netflix, Disney+ இரண்டும் மலிவான, விளம்பரங்களுடன் கூடிய சந்தாத் திட்டத்தை அறிமுகம் செய்யவிருக்கின்றன.
அது நாடுகளின் பொதுத் தொலைக்காட்சிகள் ஈட்டும் விளம்பர வருவாய்க்குப் பெரும் சவாலாக இருக்கப்போவதாய்க் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பயனீட்டாளர்கள்
Netflix - 220 மில்லியன்
Disney Plus - 152 மில்லியன்
Netflix தனது தளத்தில் விளம்பரங்களை அறிமுகம் செய்வது குறித்துப் பல மாதங்களாக யோசித்துவந்தது.
இணையக் காணொளிச் சேவைக்கான போட்டி அண்மை மாதங்களில் அதிகரித்துள்ளது. அதனையடுத்து விளம்பரங்களை அறிமுகம் செய்ய Netflix முடிவெடுத்தது.
வரும் நவம்பர் மாதம் Netflix-உம், டிசம்பர் மாதம் Disney Plus-உம் விளம்பரங்கள் கொண்ட சேவைக்கு சந்தா செலுத்தும் திட்டத்தைக் அறிமுகம் செய்யவிருக்கின்றன.
அது இந்தத் தலைமுறை கண்டிராத மிகப்பெரிய விளம்பரத் தளமாக இருக்கும் என்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.
தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு உலகளவில் செலவிடப்படும் தொகை கிட்டத்தட்ட 159 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று கணிக்கப்படுகிறது.
சென்ற ஆண்டு YouTube தளத்தின் விளம்பர வருவாய் 28.8 பில்லியன் டாலர்.
இத்தகைய இணையக் காணொளிச் சேவைகள் மூலம் விளம்பரதாரர்கள் எட்ட முடியாது என்று நினைத்திருந்த பயனீட்டாளர்களையும் எட்டிவிடுகின்றனர்.
இதனால் எல்லா நாடுகளிலும் பொதுத் தொலைக்காட்சிகளின் வருவாய் பெரிய அளவில் அடிபடும் என்பது கவனிப்பாளர்களின் கணிப்பு.