Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

நெடுந்தூரம் நடப்பது நல்லதா? பல முறை குறுகிய தூரம் நடப்பது நல்லதா?

வாசிப்புநேரம் -
கூடுதல் அடிகள் நடப்பதால் நல்ல சுகாதாரப் பலன்கள் உள்ளதைக் காட்டும் பல ஆய்வுகள் உள்ளன.

ஆனால் நெடுந்தூரம் நடப்பது நல்லதா? பல முறை குறுகிய தூரம் நடப்பது நல்லதா?

புதிய ஆய்வு ஒன்று அதற்கான பதிலை அளித்துள்ளது.

நெடுந்தூரம் நடப்பதே சிறந்தது என்று அது கூறுகிறது.

உதாரணத்திற்கு நாளுக்கு 5000 அடிகள் - அதை ஒரே முறை நெடுந்தூரமாக நடப்பதே சிறந்தது என்று ஆய்வு சொல்கிறது.

Annals of Internal Medicine எனும் மருத்துவ இதழில் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

8,000க்கும் குறைவான அடிகள் நடப்பவர்களை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் பெரும்பாலானோர் 5000க்கும் குறைவான அடிகளை எடுத்து வைத்தனர்.

15 நிமிடங்களுக்கு மேல் அடிக்கடி நடப்பவர்களில் ஏறக்குறைய 70 விழுக்காட்டினர் சுமார் 10 ஆண்டுகளுக்கு இதயம் சார்ந்த நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று ஆய்வில் தெரியவந்தது.

அதற்கென குறுகிய நேரங்களுக்கு நடப்பது வேலை செய்யாது என்பது அர்த்தமில்லை.

ஒரே முறை நடந்து அடிகளைச் சேகரிப்பது இன்னும் நன்மையைத் தரக்கூடும் என்பது ஆய்வாளரின் கருத்து.

இங்கிலாந்தைச் சேர்ந்த 34,000 பேர் ஆய்வில் கலந்துகொண்டனர்.

சுமார் ஒரு வாரத்திற்கு அவர்கள் நடந்த அடிகள் கணக்கிடப்பட்டன.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்