Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆய்வாளர்கள் கண்டுபிடித்த புதிய வகை எறும்பு... எங்கே?

வாசிப்புநேரம் -
மலேசியாவின் சபா (Sabah) மாநிலத்தில் புதிய வகை எறும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனை அங்குள்ள UMS பல்கலைக்கழகம் தெரிவித்தது.

புதிய வகை எறும்புக்கு விரிவுரையாளர் ஒருவரின்
பெயர் சூட்டப்பட்டிருப்பதாய்க் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு (2023) கவாங் (Kawang) காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது அந்த எறும்பு வகை கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றின் ராணிகளுக்குச் சிறிய சிறகுகள் இருக்கும். ஆனால் அவற்றால் பறக்க இயலாது.

அவை பெரும்பாலும் அழுகிய மரக்கட்டைகளிலும் மண்ணிலும் வசிக்கும்.

1996ஆம் திறக்கப்பட்ட UMS பல்கலைக்கழகம் எறும்புகள் பற்றிய ஆய்வுகளைப் பல்லாண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

புதிய வகை எறும்பை அடையாளங்கண்ட விரிவுரையாளரும் அவரது குழுவினரும் தொடர் ஆய்வுகளின் மூலம் சபாவில் இன்னும் பல புதிய எறும்பு வகைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்