Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பயங்கரமான கனவுகள் அடிக்கடி வருகிறதா? மறதி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்! - ஆய்வு

வாசிப்புநேரம் -

வாரத்தில் ஒரு முறையாவது பயங்கரமான கனவுகளைக் காண்போரிடையே அறிவாற்றல் சரிவு ஏற்படும் வாய்ப்பு, 4 மடங்கு அதிகம் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

அவர்கள் நடுத்தர வயதினராக இருந்தால், வேகமான விகிதத்தில் அறிவாற்றல் சரிவு ஏற்பட்டு, பிற்காலத்தில் மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக பர்மிங்ஹம் பல்கலையின் (University of Birmigham) ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆய்வுகளின் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டால், அது மறதி நோயைச் சோதிக்கவும் அது மோசமாகும் விகிதத்தைக் குறைக்கவும் புதிய வழிகளை வகுக்க உதவும் என்று கூறப்படுகிறது.

தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழவைக்கும் அளவுக்கு, அச்சுறுத்தும் கனவுகளால் சுமார் 5 விழுக்காட்டினர் வாரத்தில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது பாதிக்கப்படுவதாக ஆய்வு காட்டியது.

குறைந்த தூக்கம், அதிக மன உளைச்சல், மனக்கவலை ஆகியவை, அதற்குத் தூண்டலாம் என்று நம்பப்படுகிறது.

ஆய்வில், 35 வயதிலிருந்து 64 வயதுக்கு இடைப்பட்ட 600 பேர், 79 வயதுக்கு மேற்பட்ட 2,600 பேர் ஆகியோரின் தகவல்கள் ஆராயப்பட்டன.

பயங்கரமான கனவுகளைக் கண்டு, அறிவாற்றல் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு, பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்