ஊட்டச்சத்து: கால்சியம் நிறைந்த உணவுகள் - பல், எலும்புகளுக்கு உறுதி

(படம்: Pixabay)
எலும்புகள், பற்கள் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு கால்சியம் அவசியமானது.
ஆகையால் நமது உணவுப் பழக்கத்தில் கால்சியத்தைச் சேர்த்துக்கொள்வது மிக முக்கியம்.
கால்சியத்தின் பயன்கள்:
-osteoporosis எனும் எலும்புத் தேய்மானம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்
“கால்சியத்தைப் போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் உடல் எலும்புகள் வலுவிழந்து பலவீனமாகலாம்”
கல்பனா பாஸ்கரன்
தலைவர், ஊட்டச்சத்துப் பிரிவு
துமாசிக் பலதுறைக் கல்லூரி
கால்சியச்சத்து நிறைந்த சில உணவுகள்:
-தயிர்
-பால்
-பச்சை இலைக் காய்கறிகள்
-கால்சியம் சேர்க்கப்பட்ட fortified சோயா பீன் பால், பிஸ்கெட், ரொட்டி
-சீஸ் (cheese)
கால்சியச்சத்து நிறைந்த பலவகையான உணவுகளை உட்கொள்ளவேண்டும்.
‘Higher in Calcium’ எனும் Healthier Choice குறியீடு கொண்ட உணவுகளை வாங்குவது நல்லது. அந்தக் குறியீடு உள்ள உணவுகள், மற்ற உணவுப் பொருள்களைவிட 25 விழுக்காடு அதிகக் கால்சியம் கொண்டவை.