Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

ஊட்டச்சத்து: இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள்

வாசிப்புநேரம் -

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு, இரும்புச்சத்தை (iron) நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

இரும்பு, என்பது ஒருவகை தாதுச்சத்து (mineral).

ஒவ்வொரு தாதுச்சத்துக்கும் முக்கியச் செயல்பாடு உள்ளது என்றும் போதுமான இரும்புச் சத்து எடுத்துக்கொள்ளாவிட்டால், Anemia எனும் ரத்த சோகை ஏற்படலாம் என்றும் ஊட்டச்சத்து நிபுணர் கல்பனா பாஸ்கரன் ‘செய்தி’யுடன் பகிர்ந்துகொண்டார்.

(தலைவர், ஊட்டச்சத்துப் பிரிவு
துமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரி)

இரும்புச்சத்து -அதன் முக்கியத்துவம்

இரத்த சோகை என்பது உடலில் போதுமான சிவுப்பு இரத்த அணுக்கள் இல்லாத நிலையைக் குறிக்கிறது.

இரத்தத்தில் உயிர் வாயுவை எடுத்துச் செல்லும் hemoglobin எனும் புரதத்தின் சரியான செயல்பாட்டிற்கு, இரும்புச்சத்து அவசியம்.

நம் உடலின் பல்வேறு முக்கியமான செயல்பாடுகளுக்கு, இரும்புச்சத்து பங்களிக்கிறது.

குறைபாடுகள்

நாம் உட்கொள்ளும் உணவில் போதுமான இரும்புச்சத்து இல்லாவிட்டால், சோர்வு, மயக்கம், போன்றவை ஏற்படலாம். வெளிறிய தோல் (pale skin), எளிதில் உடையக்கூடிய நகங்கள் என்று சில குறைபாடுகள் ஏற்படக்கூடும்.

இரும்புச்சத்து நிறைந்த சில உணவு வகைகள்:

Haem (மாமிச உணவு), non-haem (தாவர உணவு) என்று இருவகை உணவுகளில் இரும்புச்சத்து உள்ளது.

மாமிச உணவு வகைகள்:

-சிவப்பு இறைச்சி (red meat)
-கடலுணவு: மீன், கிளிஞ்சல் (clam)
-கோழி

தாவர உணவு வகைகள்:

-மொச்சை வகைகள் (beans)
-ப்ரோக்கோலி (broccoli)
-பருப்பு வகைகள் (lentils)
-கொண்டைக்கடலை
-உலர்ந்த பழங்கள் (dried fruits)
-விதைகள் (seeds), கொட்டைகள் (nuts).
-இரும்புச்சத்து சேர்க்கப்பட்ட fortified cereal, ரொட்டி

தாவர உணவு வகைகளைவிட, மாமிச உணவிலிருந்து (animal source) கிடைக்கப்பெறும்
இரும்புச் சத்து நம் உடலில் இன்னும் அதிகமாக கிரகிக்கப்படுவதாகக் (absorb) கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்