Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஊட்டச்சத்து: பொட்டாசியச்சத்து நிறைந்த உணவுகள்

வாசிப்புநேரம் -
பொட்டாசியம் என்பது நம் உணவில் கிடைக்கப்பெறும் முக்கிய தாதுச்சத்தாகும் (mineral).

தாதுச்சத்துகள் நம் உடலுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துகளை வழங்குகின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர் கல்பனா பாஸ்கரன் ‘செய்தி’யுடன் பகிர்ந்துகொண்டார்.

உணவை அளவோடு உட்கொள்ளுதல், தரமான உணவைத் தேர்ந்தெடுத்தல் போன்றவற்றோடு சீரான உணவுப்பழக்கமும் அவசியம் என்று அவர் கூறினார்.

நம் உணவில் பொட்டாசியத்தின் முக்கியத்துவம் என்ன?

நரம்பு, தசைகள் ஆகியவற்றின் இயக்கம், ரத்த அழுத்தம், நீர்ச் சமநிலை போன்றவற்றுக்குப் பொட்டாசியச்சத்து உதவுகிறது.

பொட்டாசியம் நிறைந்த சில உணவுகள்:

-வாழைப்பழங்கள்
-முழு தானியங்கள்
-பச்சையிலை, காய்கறிகள்
- உருளைக்கிழங்கு
- பயறு வகைகள் 
(பயிறு வகைகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், புரதம், போன்ற பலவகையான ஊட்டச்சத்துகள் உள்ளன)
-அவக்காடோ (avocado)

போதுமான பொட்டாசியம் இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய சில விளைவுகள்..

-செரிமானப் பிரச்சினைகள்
-பலவீனம், சோர்வு
-சீரற்ற இதயத் துடிப்பு
-தசைப் பிடிப்பு 

சாப்பிடும்போது அளவு என்பதைக் கருத்தில்
கொள்ளவேண்டும்.

பலவகை ஊட்டச்சத்து நிறைந்த சீரான உணவுப்பழக்கம் மூலம் நம் உடலுக்குத் தேவையான பொட்டாசியச்சத்து கிடைத்துவிடும்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்