Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பொது இடத்தில் இலவச wifi... பாதுகாப்பானதா? பயன்படுத்தலாமா?

வாசிப்புநேரம் -

எங்கும் எந்நேரமும் இணையத்தில் பொருள்கள் வாங்குவது வழக்கமாகிவிட்டது. 

அவற்றுக்கு உடனடியாகப் பணமும் செலுத்திவிடுகின்றோம்.

ஆனால் பொது இடங்களில் இணையப் பணப் பரிவர்த்தனைகள் செய்வது பாதுகாப்பானதா?
 
அதிலும் இலவசமாக வழங்கப்படும் WiFi இணைப்பு வழி பணப் பரிவர்த்தனைகளைச் செய்வது சரியா?

இணையப் பாதுகாப்பு வல்லுநர் கணேஷ் நாராயணனைத் தொடர்புகொண்டது 'செய்தி'...

பொது இடங்களில் வழங்கப்படும் இலவச WiFi இணைப்பு மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்வது பாதுகாப்பானதா?

📶 இல்லை. பெரும்பாலும் பொது இடங்களில் வழங்கப்படும் WiFi இணைப்பு பாதுகாப்பு இல்லாதது.

📶 அவற்றுக்கு 2ஆம் கட்ட கடவுச்சொல் பாதுகாப்புக் கிடையாது.

📶 தகவல் ஊடுருவல் ஏற்பட வாய்ப்பு உண்டு.

📶 பணப் பரிவர்த்தனைகளுக்கு 4G அல்லது 5G கட்டமைப்பைப் பயன்படுத்துவது சிறந்தது.


வீட்டில் உள்ள WiFi?

📶 பாதுகாப்பானதுதான்.... ஆனால் நிறுவனம் தொடக்கத்தில் வழங்கிய WiFi கடவுச்சொல்லை மாற்ற வேண்டும்.

📶 சொந்த, கடுமையான கடவுச்சொல் அமைப்பது சிறந்தது.


பொது இடங்களில் இலவச WiFiஐ எவற்றுக்குப் பயன்படுத்தலாம்?

📶 தனிப்பட்ட தகவல்கள் தேவைப்படாதவற்றுக்கு.

📶 சாதாரண இணையப் பயன்பாட்டிற்கு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்