மறதிநோயை விரட்டியடிக்கிறது இந்த ஒரு குணம்... அது என்ன?
படம்: Envato Elements
மருந்துகளால் சாதிக்க முடியாததை...
மனிதனின் ஒரு குணம் சாதிக்கிறது.
அது என்ன?
நம்பிக்கை அதிகம் கொண்டவர்களுக்கு Dementia எனும் மறதிநோய் வரும் வாய்ப்புக் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அது தெரியவந்தது.
2006 முதல் 2020 வரை 14 ஆண்டுகள் நடத்தப்பட்டது ஆய்வு.
அதில் வயதான 9,000 பேர் பங்கேற்றனர்.
அதிக நம்பிக்கை கொண்டவர்களுக்கு மறதிநோய் ஏற்படும் அபாயம் 15 விழுக்காடு குறைவாக இருப்பது தெரியவந்தது.
வாழ்க்கை மீது அதிகக் கட்டுப்பாடு வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தாலே நம்பிக்கை அதிகரிக்கும் என்கிறார் மனநல ஆலோசகர்.
எதிர்மறை எண்ணங்களும் தொடர்ச்சியான கவலையும் இருப்பவர்களுக்கு மன அழுத்தமும் சமூகத் தனிமையும் அதிகரிப்பதாக South China Morning Post நாளேடு குறிப்பிட்டிருந்தது.
அவை மறதிநோய் அபாயத்தை உயர்த்துகின்றன.
மாற்ற முடியாத பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக நம் கட்டுப்பாட்டில் இருப்பவற்றில் கவனம் செலுத்துவது மனநலனுக்கு உதவும்.
அதிக நம்பிக்கை கொண்டவர்கள்...
✅ உடற்பயிற்சி செய்வது
✅ ஆரோக்கியமாக உண்பது
✅ நன்றாகத் தூங்குவது
✅ புகைபிடிப்பதைத் தவிர்ப்பது
✅ வலுவான சமூக உறவுகளைப் பேணுவது
போன்றவற்றில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
அவை இதய, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.