வாழ்வியல் trending
ஆரஞ்சு சுவை Yakult பானத்திற்கு ஏங்கும் ரசிகர்கள்.... காரணம் என்ன?
CNA/Darcel Al Anthony
This audio is generated by an AI tool.
"இறுதி வரை ஆரஞ்சு சுவைக்கு ஆதரவு தருவேன்!"
இதுபோன்ற பல ரசிகர்களின் ஏக்கம் நிறைந்த பதிவுகள் இணையத்தில் இந்த வாரம் வலம் வந்தன.
Yakult நிறுவனம் அதன் ஆரஞ்சு சுவை பானத்தை பீச் (peach) சுவைக்கு மாற்றுவதாக அறிவித்ததால் அந்த ஆதங்கம்.
இதற்கு முன் சிங்கப்பூரில் விற்கப்படும் சுவைகளில் மாற்றம் செய்யப்பட்டது 1980இல்.
இங்குள்ள தொழிற்சாலையில் உற்பத்தி நெருக்கடிகள் இருப்பதால் மாற்றம் செய்யப்படுவதாக நிறுவனம் சொன்னது.
வாடிக்கையாளர்களின் விருப்பமும் ஒரு காரணம்.
சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பிக் கேட்கும் சுவை, பீச்.
மற்ற சந்தைகளில் அது பிரபலமானதாகவும் உள்ளது.
இது ஒரு புறம்.
விருப்பமான ஓர் உணவோ பானமோ இனி இல்லை என்றால் மக்கள் ஏன் இவ்வளவு சோகமடைகின்றனர்?
அந்தப் பொருளைவிட அது எதைப் பிரதிபலிக்கிறது என்பதில்தான் பதில் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
உணவு, பானங்கள் மக்களின் நினைவுகளுடனும் அடையாளங்களுடனும் பின்னிப் பிணைந்தவை என்று கூறப்பட்டது.
குறிப்பாக,Yakult போன்ற நிறுவனங்கள்.
அது பலரின் பிள்ளைப் பருவத்தில் முக்கிய இடம் பிடித்த ஒன்று.
பொருளை நீக்கும்போது நினைவுகளில் ஒரு பகுதியை இழப்பதற்குச் சமமாகப் பார்க்கப்படலாம்.
அடிக்கடி அந்தப் பானத்தை அருந்தாவிட்டாலும் அதை அருந்திய நினைவுகள் நீங்குவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
அதோடு வழக்கமான நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்படுவதை மக்கள் விரும்புவதில்லை என்றும் கூறப்பட்டது.