Skip to main content
சிறப்பாக நடைபெறும் ஆர்க்கிட் திருவிழா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிறப்பாக நடைபெறும் ஆர்க்கிட் திருவிழா

வாசிப்புநேரம் -
ஆர்க்கிட் மலர்கள் என்றால் பலருக்கும் சிங்கப்பூர்தான் நினைவுக்கு வரும்.

இங்கு எந்த அளவுக்கு அவை பிரபலமோ அந்த அளவுக்குத் தென்னமெரிக்க நாடான பெருவிலும் பிரபலம்.

அங்கு 3,000 வகை ஆர்க்கிட் மலர்களைக் காணலாம்.

லண்டனின் கியூ பூந்தோட்டங்களில் நடைபெறும் ஆர்க்கிட் திருவிழாவில் அவற்றைப் பார்க்கலாம்.

அந்த வண்ணமிகு படைப்பு குளிர்காலத்துக்கு இடையே மனத்துக்கு இதமான வரவேற்பை அளிக்கிறது.

கியூவில் உள்ள அரச தாவரவியல் தோட்டங்களில் அது முக்கிய இடம் பிடித்துள்ளது.

கண்ணைக் கவரும் வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ஆர்க்கிட் மலர்களுடன் இயற்கையான பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வனவிலங்குச் சிற்பங்களும் பலரை ஈர்க்கின்றன.

ஆர்க்கிட் திருவிழாவில் இவ்வாண்டின் கருப்பொருள் பெரு.

அதனால் அந்நாட்டுக்கே உரிய பறவைகளும் காட்சியளிக்கின்றன.

Princess of Wales காப்பகத்தின் தோட்டக்கலை வல்லுநர்கள் கடந்த ஒரு மாதமாக நுண்ணிய வேலைப்பாடுகளைச் செய்து வந்தனர்.

எனினும் ஓராண்டுக்கு முன்பே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

உலகில் ஆக அதிகமான வகைகளைக் கொண்ட பூப்பூக்கும் செடிகளில் ஒன்று ஆர்க்கிட்.

மொத்தம் சுமார் 30,000 வகைகள்.

அண்டார்ட்டிக்கா தவிர மற்ற எல்லாக் கண்டங்களிலும் அதனைக் காணலாம்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்