Skip to main content
'Cyber Monday'... அப்படி என்றால்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

'Cyber Monday'... அப்படி என்றால்?

வாசிப்புநேரம் -
இன்று 'Cyber Monday'...

இணையத்திலும் பல கடைகளிலும் அதை முன்னிட்டு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சென்ற வெள்ளிக்கிழமை (29 நவம்பர்) 'Black Friday'...

அன்றும் பல சலுகைகள் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டன.

அமெரிக்காவில் ராணுவத்தினரும் கடற்படையினரும் நவம்பர் மாதத்தில் காற்பந்து விளையாடுவார்கள். அதைக் காண மக்கள் கூடுவார்கள்.

அந்நாளன்று அதிகாரிகள் விடுப்பு இல்லாமல் வேலைக்குப் போகவேண்டிய நிலை ஏற்படும். அதைக் குறிக்க 1960களில் அந்நாள் 'Black Friday' என அழைக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையில் திரளும் மக்களை ஈர்க்கக் கடைகள் செயல்பட்டன.

பொருள்களைக் கூடுதலாக விற்பது அவற்றின் நோக்கம்.

'Cyber Monday' எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது?

2005இல் 'Cyber Monday' முதலில் அனுசரிக்கப்பட்டது.

'Black Friday' தினத்தன்று கடைகளில் சலுகைகள் வழங்கப்பட்டன. அதை இணைய வர்த்தகங்களும் வழங்க விரும்பின. 'Thanksgiving' விடுமுறை முடிந்து வரும் திங்கள்கிழமையன்று சலுகைகளை வழங்க இணைய வர்த்தகங்கள் முடிவு செய்தன.

அமெரிக்காவில் 'Thanksgiving' விடுமுறைக்குப் பிறகு வேலைக்குத் திரும்பும் அதிகமானோர், பொருள்களை வாங்க விரும்பியதை அந்நாட்டின் தேசிய சில்லறை வர்த்தகச் சம்மேளனம் (National Retail Federation) கண்டது.

அந்தக் காலக்கட்டத்தில் அலுவலகங்களில் இணைய இணைப்பு வலுவாக இருந்தது.

அதனால் பலர் வேலைக்குத் திரும்பிய பிறகு பொருள்களை வாங்கும் போக்கில் ஈடுபட்டனர்.

இணைய வர்த்தகம் பிரபலமாகி வந்தபோது, இணையத்தில் இயங்கும் கடைகளில் 'Cyber Monday' தினத்தன்று சலுகைகள் கூடின.

வாடிக்கையாளர்களுக்கு ஏன் 'Cyber Monday' பிடிக்கும்?

விடுமுறை காலத்தின்போது பொருள்களை வாங்குவதற்குக் குடும்பத்தைவிட்டுச் செல்வதைப் பலர் விரும்பவில்லை.

'Black Friday' அன்று கடைகளில் இருக்கும் நீண்ட வரிசைகளில் நிற்கவும் மக்கள் விரும்புவதில்லை. அதனால் 'Cyber Monday' அன்று அலைச்சலின்றிச் சலுகைகளுடன் பொருள்களை வாங்குவதை மக்கள் விரும்புகின்றனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்