Oscars வரலாற்றில் முதல்முறையாக ஒரே படத்துக்கு 16 நியமனங்கள்
This audio is generated by an AI tool.
ஆஸ்கர் (Oscars) விருதுகளுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல்முறையாக ஒரே படத்துக்கு 16 நியமனங்கள் கிடைத்திருக்கின்றன.
"Sinners" என்ற அந்தத் திகில் படம் காட்டேரிகளைக் கதைக்களமாகக் கொண்டது.
சிறந்த திரைப்படம் உட்படக் கிட்டத்தட்ட அனைத்துப் பிரிவுகளிலும் அந்தப் படம் நியமனம் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ஒரே படம் ஆக அதிகமாக 14 ஆஸ்கர் நியமனங்களைப் பெற்றிருந்தது.
"Titanic," "La La Land", "All About Eve" ஆகிய திரைப்படங்கள் அந்தச் சாதனையைப் படைத்திருந்தன.
"Sinners" திரைப்படம் உலகளவிலும் பிரபலமானது.
360 மில்லியன் டாலரை அது வசூலித்தது.
விருதுகள் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று படத்தின் இயக்குநர் ரயன் கூக்லர் (Ryan Coogler) தெரிவித்தார்.
மக்கள் படத்தை ரசிப்பதே தமக்குப் போதுமானது என்றும் அவர் கூறினார்.
படத்தின் கதாநாயகன் மைக்கல் ஜோர்டான் (Michael B. Jordan) சிறந்த நடிகருக்கான பிரிவில் நியமனமாகியுள்ளார்.
98ஆவது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.