Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

‘Bimpert’ முதல் ‘Hornerman’ வரை... அகராதியில் இடம்பிடித்த கரீபியன் சொற்கள்!

வாசிப்புநேரம் -
‘Bimpert’ முதல் ‘Hornerman’ வரை... அகராதியில் இடம்பிடித்த கரீபியன் சொற்கள்!

படம்:Pixabay

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஒருவரை முட்டாள் என்று சொல்ல ‘bimpert’...

காதலில் நம்பிக்கைத் துரோகம் செய்யும் ஆணுக்கு ‘hornerman’!

கரீபியன் (Caribbean), பெர்முடா (Bermuda) பகுதிகளில் பல்லாண்டாய்ப் பேசப்படும் 12க்கும் மேற்பட்ட சொற்களுக்கு இப்போது அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அவற்றை ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி புதன்கிழமை தனது பட்டியலில் சேர்த்தது.

பெர்முடாவில் முட்டாள்தனமான ஒருவரைக் குறிக்க ‘Bimpert’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

டிரினிடாட் அண்ட் டொபாகோ (Trinidad and Tobago) தீவில் பயன்படுத்தப்படும் ‘hornerman’ எனும் சொல் நம்பிக்கைத் துரோகம் செய்யும் ஆணைக் குறிக்கிறது.

சுவாரசியமான உணவுச் சொற்களும் பட்டியலில் சேர்ந்துள்ளன.

தேங்காய், சர்க்கரை, மசாலாப் பொருள்களால் செய்யப்படும் ‘sugar cake’ அவற்றில் ஒன்று.

வேர்க்கடலை, பால், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் ‘peanut punch’ பானமும் இடம்பெற்றுள்ளது.

இந்த அங்கீகாரம் பழைய சொற்களையும் பாரம்பரியத்தையும் இளைய தலைமுறையினருக்குக் கொண்டுசெல்ல உதவும் என்று டிரினிடாட் மக்கள் கூறுகின்றனர்.

ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் தற்போது சுமார் 500,000 சொற்களும் சொற்றொடர்களும் இடம்பெற்றுள்ளன.
ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்