Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

பிக்காசோ காலமாகி 50 ஆண்டுகள் நிறைவு... தொடரும் மக்களின் தீரா மோகம்

வாசிப்புநேரம் -
உலகின் பிரபல ஓவியர் பாப்லோ பிக்காசோ (Pablo Picasso) காலமாகி 50 ஆண்டுகளாகிவிட்டன.

இருப்பினும் அவரின் கலைப்படைப்புகள் மீதான மக்களின் மோகம் குறைந்தபாடில்லை.

அவரின் கலைப்படைப்புகள் ஒவ்வொன்றும் என்ன விலைக்கு விற்கப்பட்டன என்று தெரியுமா?

5 கலைப்படைப்புகள்: 100 மில்லியன் டாலருக்கு மேல்
16 கலைப்படைப்புகள்: 50 மில்லியன் டாலருக்கு மேல்
39 கலைப்படைப்புகள்: 30 மில்லியன் டாலருக்கு மேல்

ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட கலைப்படைப்பு?

"The Women of Algiers (Version O)" - விலை: 179.4 மில்லியன் டாலர்

இது 1955ஆம் ஆண்டு வரையப்பட்டது. 2015ஆம் ஆண்டு அந்த விலைக்கு விற்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், பிக்காசோவின் கலைப்படைப்புகளின் விற்பனை 4.7 பில்லியன் டாலரை ஈட்டித் தந்திருப்பதாக Artprice-இன் வருடாந்திர அறிக்கை குறிப்பிட்டது.

அவருக்கு அடுத்த நிலைகளில் ஆண்டி வார்ஹோலும் (3.4 பில்லியன் டாலரும்) கிளாட் மொனட்டும் (2.6 பில்லியன் டாலர்) உள்ளனர்.

பிக்காசோ ஓவியர் மட்டும் கிடையாது.

அவரின் கலைப்படைப்புகளில் சிற்பங்கள், மட்பாண்டங்கள், செதுக்கிய சித்திரங்கள் ஆகியவையும் அடங்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் அவை 31,745 முறை ஏலத்திற்கு வந்திருக்கின்றன.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்