Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

சரித்திரம் படைக்கும் வகையில் 65 மில்லியன் பவுண்டுவரை ஏலத்தில் விற்கப்படக்கூடிய ஓவியம்

வாசிப்புநேரம் -
சரித்திரம் படைக்கும் வகையில் 65 மில்லியன் பவுண்டுவரை ஏலத்தில் விற்கப்படக்கூடிய ஓவியம்

படம்: GUSTAV KLIMT

லண்டனில் இம்மாதம் (ஜூன்) பிற்பகுதியில் நடைபெறவுள்ள ஏலத்தில் ஓர் ஓவியம் சரித்திரம் படைக்கவிருக்கிறது.

ஆஸ்திரியாவின் கலைஞர் குஸ்தாவ் கிளிம்த் (Gustav Klimt) தீட்டிய கடைசி ஓவியம் 65 மில்லியன் பவுண்ட்ஸ் (111.7 மில்லியன் வெள்ளி) வரை விலை போகலாம் என BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Dame mit Fächer எனப் பெயரிடப்பட்ட அந்த ஓவியம் 1918ஆம் ஆண்டில் தீட்டப்பட்டது.

அந்த ஓவியத்தில் இடம்பெற்ற பெண்ணின் பெயர் தெரியவில்லை.

கிளிம்த்தின் கடைசி ஓவியம் அவர் மாண்டபோது ஓவியக் கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக BBC கூறியது.

இதுவரை ஐரோப்பாவில் ஏலத்தில் விடப்பட்ட ஆக விலைமதிப்புள்ள ஓவியம் எனும் பெருமை அதனைச் சேரும்.

ஓவியம் ஐரோப்பிய அம்சங்களையும் ஜப்பானிய
அம்சங்களையும் கொண்டுள்ளது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்