Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முக்கனியில் சிறந்தது இக்கனியே... உலகெங்கும் மணம் பரப்பும் பண்ருட்டி பலாப்பழம்

வாசிப்புநேரம் -

உலகிலேயே, ஆக அதிகமான பலாப்பழங்கள் விளையும் நாடு இந்தியா. 

கேரளம், தமிழ்நாடு, அஸ்ஸாம், பீஹார் ஆகிய மாநிலங்களில் பலாப்பழம் அதிகமாக விளைகிறது. 

குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி நகரில் விளையும் பலாப்பழங்களுக்குத் தனி ருசி உண்டு. 

அங்கு பலா மரத் தோப்புகளை உருவாக்குவோர், வேறு எவ்விதக் கனிவர்க்கங்களையும் வளர்ப்பதில்லை. 

மீண்டும் மீண்டும் பலாப்பழங்களை மட்டுமே அங்கு விளைவிப்பர். 

இந்தியாவிலேயே, பண்ருட்டியில் மட்டும்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. 

பண்ருட்டி அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில், 800 ஹெக்டர் பரப்பளவில் பலா மரங்கள் வளர்கின்றன.

ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு மரத்திலும் 250 பழங்கள் வரை காய்க்கும்.

பண்ருட்டியில் ஆண்டுக்கு மொத்தம் 45,000 மெட்ரிக் டன் முதல் 50,000 மெட்ரிக் டன் வரையிலான பலாப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நகர் முழுதும் பலாப்பழத்தின் நறுமணம் வீசும்...ஒவ்வொரு கடையிலும் பலாப்பழத்திற்குத் தனி இடம் இருக்கும்.


7 கிலோகிராமிலிருந்து 40 கிலோகிராம் வரையிலான எடை கொண்ட பலாப்பழங்கள்,  வழக்கத்தை விட அளவில் பெரிதாக இருக்கும்.

பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் சற்றும் தடிப்பாகவும், நீளமாகவும், மிகவும் இனிப்பாகவும் இருப்பது பண்ருட்டி வகையின் சிறப்பு.

பழங்களுக்குச் சென்னை, மும்பை, புனே (Pune), பெங்களூரு ஆகிய நகரங்களில் அதிகத் தேவை உள்ளது.

மா, பலா, வாழை என்னும் முக்கனிகளின் வரிசையில் நடுவில் இருந்தாலும் பலாப்பழ ரசிகர்களின் முதல் தெரிவு என்னவோ பலாப்பழம்தான்... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்