Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கார்களுக்குள் வரவிருக்கும் புதுப்புது அம்சங்கள்

கிருமிப்பரவல் சூழலில் மக்கள் அவர்களது தனிப்பட்ட சுகாதாரத்தில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.

வாசிப்புநேரம் -
கார்களுக்குள் வரவிருக்கும் புதுப்புது அம்சங்கள்

(படம்: Patrick T. FALLON / AFP)

கிருமிப்பரவல் சூழலில் மக்கள் அவர்களது தனிப்பட்ட சுகாதாரத்தில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.

எனவே வாகனத் தொழில்துறை கார்களில் பொருத்தக்கூடிய புதிய 'சுகாதாரச் சாதனங்களை' உருவாக்க முனைகிறது.

காற்றுச் சுத்திகரிப்புச் சாதனங்கள், கார் இருக்கை அபாயக் குறி, தானியக்கச் சூரியக் கண்ணாடி... அதுபோன்ற சாதனங்கள் Consumer Electronics Show (CES) எனும் பயனீட்டாளர்களுக்கான மின்சாதனக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

அந்தக் கண்காட்சி அமெரிக்காவின் லாஸ் வேகஸில் (Las Vegas) இடம்பெற்றது. கார்களைப் பாதுகாப்பான இடமாக அமைப்பதற்குக் காட்சியில் வைக்கப்பட்ட சாதனங்கள் உதவும் என்று Valeo நிறுவனம் தெரிவித்தது.

அந்த பிரெஞ்சு நிறுவனத்தின் காற்றுச் சுத்திகரிப்புச் சாதனம் கார்களிலும் பேருந்துகளிலும் உள்ள 95 விழுக்காடு வரையிலான COVID-19 உள்ளிட்ட நோய்க்கிருமிகளை அகற்றக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.

பிள்ளைகளின் கார் இருக்கைகளில் அபாய ஒலிச் சாதனத்தைக் காட்சிக்கு வைத்தது Filo என்ற நிறுவனம். சூடான நாள்களில் சிறுவர்களைத் தெரியாமல் காரில் விட்டுவைப்பதைத் தவிர்க்க அது உதவும்.

விறுவிறுப்பான வாழ்க்கையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பயனீட்டாளர்கள் மறந்துவிடலாம்.

காட்சிக்கு வைக்கப்பட்ட பல சாதனங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு மக்களின் சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டுள்ளன.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்