நாய்க் குட்டியா? ஒட்டகச்சிவிங்கிக் குட்டியா? - வித்தியாசமான ஒப்பனை
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Pet grooming அதாவது செல்லப்பிராணிகளுக்கான ஒப்பனைப் பராமரிப்புச் சேவை.
பொதுவாகச் செல்லப்பிராணிகளின் உரோமம், நகங்களை வெட்டி அவற்றைக் குளிப்பாட்டும் சேவைகள் அதில் வழங்கப்படும்.
ஆனால் வித்தியாசமான ஒப்பனை ஒன்று கண்ணில் பட்டது.
நாய்க்குட்டிகளுக்கு வண்ணம் பூசி அவை புலிக்குட்டியைப் போலவும் ஒட்டகச்சிவிங்கியைப் போலவும் மாற்றப்பட்டுள்ளன.
மலேசியாவைச் சேர்ந்த Celebrity Pet Group என்ற TikTok கணக்கில் இந்தக் காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளன.
அவற்றைப் பார்த்த இணையவாசிகளில் பலர் செல்லப்பிராணிகளுக்கு இந்த வண்ணங்கள் பாதுகாப்பானதா என்று கேட்டு வருகின்றனர்.
சாயங்கள் பிரத்தியேகமானவை என்பதால் அவை செல்லப்பிராணிகளுக்குப் பாதுகாப்பானதே என கணக்கின் உரிமையாளர் கூறியிருக்கிறார்.
இணையவாசிகளில் சிலர் இந்த ஒப்பனையை ரசிக்கின்றனர்.
இன்னும் சிலர் எதற்காக இப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆதாரம் : Mediacorp Seithi