Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சீனாவில் நடந்த உலக அழகிப் போட்டியில் உயரிய பரிசை வென்ற 'அழகும் அறிவும்' கொண்ட இளம் மாணவி

வாசிப்புநேரம் -

சீனாவைச் சேர்ந்த ஹொங் ஹௌயுன் (Hong Haoyun) சீனாவில் நடைபெற்ற 72ஆவது உலக அழகிப் போட்டியில் பங்கெடுத்து உயரிய பரிசை வென்றுள்ளார்.

சீனாவில் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று சிங்ஹுவா (Tsinghua) பல்கலைக்கழகம்.

ஹொங் ஹௌயுன் அங்கு 2017ஆம் ஆண்டில் படிப்பை மேற்கொள்ளத் தொடங்கியதாக SCMP செய்தி நிறுவனம் கூறியது.

அவர் அங்கு தொடர்ந்து PhD முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

அறிவும் அழகும் சேர்ந்திருக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ஹொங் ஹௌயுன்.

அவர் மேற்கொள்ளும் படிப்புக்கும் அழகிப் போட்டியில் கலந்துகொள்வதற்கும் சம்பந்தம் இல்லை எனச் சிலர் குறைகூறியதாக SCMP செய்தி நிறுவனம் தெரிவித்தது.


"ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது வாழ்க்கைப் பாடங்களையும் அதில் சேர்ப்பது முக்கியம். அழகிப் போட்டியில் பங்கெடுத்த அனுபவம் எனக்கு அதனைக் கொடுத்திருக்கிறது. பிறர் குறைகூறுவதையோ ஒரு பெண் எப்படி நடந்துகொள்ளவேண்டும் எனச் சொல்வதைப் பற்றியோ எனக்குக் கவலை இல்லை. நம் வாழ்க்கை நம் கையில் தான் உள்ளது,"

என அவர் தன்னம்பிக்கையுடன் சொன்னார்.

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்