சிங்கப்பூரில் 24 மணி நேர இடைவிடா பியானோ இசை
படம்: SMRT/Facebook
This audio is generated by an AI tool.
24 மணி நேரம்...
இடைவேளை இல்லை...
பேஃபிரண்ட் (Bayfront) ரயில் நிலையத்தில் பியானோ இசை ஒலித்துக்கொண்டிருந்தது!
SMRT நிறுவனத்தின் ஏற்பாட்டில் 50க்கும் அதிகமான கலைஞர்கள் மாறி மாறி பியானோவை வாசித்தனர்.
ஆக மூத்தவருக்கு வயது 88.
ஆக இளையவரின் வயது 5.
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது நிகழ்வு.
ரயில் நிலையங்களில் கலையைப் பறைசாற்றும் முயற்சியில் ஓர் அங்கமாக அது நடந்ததாக SMRT சொன்னது.
ஆண்டு முழுதும் பியானோவையொட்டிப் மேலும் பல நிகழ்ச்சிகளைக் கொண்டுவரத் திட்டம் இருப்பதாக நிறுவனம் கூறியது.
அது நிலையங்களுக்குக் கலை சேர்ப்பதுடன் பயணிகளுடன் நெருக்கத்தை அதிகரிக்கவும் உதவும் என்று அது நம்புகிறது.