ரயில்களுக்குள் கவிதைகளும்... காணொளிகளும்...
ரயில் பயணங்களில் இலக்கிய ரசனையை வளர்க்க ஒரு வாய்ப்பு.
இன்று (1 நவம்பர்) முதல் அடுத்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி வரை... SMRT ரயில்களின் உட்புறங்கள் கவிதைகளால் அலங்கரிக்கப்படும்.
சிங்கப்பூர்க் கவிஞர்கள் எழுதிய 100க்கும் அதிகமான கவிதைகள் இடம்பெறும்.
ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் ஆகிய 4 மொழிகளில் உருவான கவிதைகளைப் படிக்கமுடியும். தாய்மொழிகளில் எழுதப்பட்ட கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இருக்கும்.
தமிழில் கவிதை எழுதியவர்களில்
மு. அ. மசூது (A.R.Mashuthoo), க.து.மு. இக்பால் (KTM Iqbal), லதா ( Latha) போன்றவர்களும் அடங்குவர்.
கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு, வட்டப்பாதை ஆகிய ரயில் நிலையங்களில் கவிஞர்களைக் காட்டும் காணொளிகள் ஒளிபரப்படும்.
தேசியக் கலை மன்றம், SMRT, Stellar Ace ஆகியவை இணைந்து அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன.
சிங்கப்பூரின் வளமான இலக்கியத்தை ரசிக்க பயணிகளுக்கு அது ஒரு தளமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
பயண நேரங்களைக் கலை வழி உற்சாகப்படுத்த SMRT நிறுவனமும் தேசியக் கலை மன்றமும் சில திட்டங்களை வைத்துள்ளன.
ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட நேரங்களில் உள்ளூர் இசையை ஒலிபரப்புவதும் அவற்றில் அடங்கும்.