Skip to main content
வேகாத இறைச்சி... வெந்து நொந்தார் சமையல்காரர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் trending

வேகாத இறைச்சி... வெந்து நொந்தார் சமையல்காரர் - காவல் நிலையத்துக்கு வந்த ஆச்சரியமான புகார்!

வாசிப்புநேரம் -
வேகாத இறைச்சி... வெந்து நொந்தார் சமையல்காரர் - காவல் நிலையத்துக்கு வந்த ஆச்சரியமான புகார்!

Unsplash/Dr Muhammad Amer

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் (Anantapur) மாவட்டத்தில் உள்ள தாடிபத்ரி  (Tadipatri) நகரக் காவல் நிலையத்தில் நடந்த சம்பவமொன்று  பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சோடாலா ஹாஜி (Sodala Haji) என்பவர் உகாதி பண்டிகையைக் கொண்டாட உள்ளூர் வியாபாரி ஒருவரிடம் ஆட்டிறைச்சியை வாங்கினார்.

இறைச்சியைச் சமைக்க ஹாஜி என்னென்னவோ செய்தும் அது வேகவே இல்லை.

சுமார் 20 முறைக்குமேல் முயன்றும் மாமிசம் பாறை போலக் கடினமாகவே இருந்தது.

பொறுமையிழந்த ஹாஜி சமையல் பாத்திரத்தோடு நேராகக் காவல் நிலையம் சென்றார்.

இறைச்சி விற்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரி ஆனந்த ராவ் என்பவரிடம் முறையிட்டார்.

முதலில் திகைத்துப்போன காவல்துறையினர் புகாரை விசாரித்தனர்.

சம்பந்தப்பட்ட இறைச்சி வியாபாரி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

அந்த இறைச்சிக்கு மாற்றாகப் புதிய, தரமான இறைச்சியை வழங்க வியாபாரி ஒப்புக்கொண்டார்.

வயதான ஆட்டின் இறைச்சியாக இருந்தால் அது  வேகாது என்பது அங்குள்ள மக்களின் கருத்து.

புகார் எவ்வளவு விநோதமானதாக இருந்தாலும் மக்களின் குறைகளைத் தீர்ப்பதே  காவல்துறையின் கடமை என்று தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : Others/NDTV

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்