Skip to main content
கோடையில் கைகொடுக்கும் கைப்பிடி மின்விசிறிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

கோடையில் கைகொடுக்கும் கைப்பிடி மின்விசிறிகள்

வாசிப்புநேரம் -
கோடையில் கைகொடுக்கும் கைப்பிடி மின்விசிறிகள்

Unsplash/Chandan Chaurasia

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கையில் பிடிப்பதற்கு ஏதுவாக உள்ள சிறிய மின்விசிறிகள் கோடைக்காலத்தில் கைகொடுக்கின்றன.

மலிவு விலையில் கிடைக்கும் இத்தகைய கருவிகள் குறைவான பயன்பாட்டுக்குப் பிறகு வீசப்படுவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.

பிரிட்டனில் கோடைக்காலம் என்பதால் சூட்டிலிருந்து நிவாரணம் பெறுவதற்குப் பலர் இந்தச் சிறிய மின்விசிறிகளை நாடுகின்றனர்.

ஆனால் அனைவருக்கும் இது சரியான தீர்வாகத் தெரிவதில்லை.

விலை வெறும் 10 பவுண்டுதான். 

அதனால் அவற்றைத் தூக்கியெறியத் துளியும் தயங்குவதில்லை வாடிக்கையாளர்கள்.

இத்தகைய விரைவுத் தொழில்நுட்பக் கருவிகளில் மறுபயனீடு செய்யக்கூடிய முக்கிய மூலப்பொருள்கள் உள்ளதாக  மறுபயனீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். 

செம்பு, தங்கம், லித்தியம், அலுமினியம் ஆகியவற்றை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தவது முக்கியம் என்றனர் அவர்கள். 

பிரிட்டனில் சராசரியாக நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 19,000 சிறிய மின்விசிறிகள் வாங்கப்படுகின்றன.

வீசப்படும் மின்விசிறிகள் 3.5 மில்லியன்; அவற்றில் ஒரு பகுதி புதியவை.

வாடிக்கையாளர்கள் அவற்றைப் பொறுப்புடன் பத்திரப்படுத்தி 
மீண்டும் அடுத்த கோடைக்காலத்தில் பயன்படுத்தலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டிலிருந்து இவ்வாண்டு வரை பிரிட்டனில் 589 மில்லியன் விரைவுத் தொழில்நுட்பக் கருவிகள் வீசப்பட்டன.

அந்த மலையளவுக் கழிவைக் குறைப்பதற்குச் சிறிய மின்விசிறிகளை மீண்டும் பயன்படுத்துவது உதவும் என்று நம்பப்படுகிறது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்