Skip to main content
உருளைக்கிழங்கு எப்படி உருவானது? தெரியுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

உருளைக்கிழங்கு எப்படி உருவானது? தெரியுமா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகில் அரிசி, கோதுமைக்குப் பிறகு மனிதர்களின் முக்கியமான உணவுப் பொருள் உருளைக்கிழங்கு.

அது எப்படி உருவானது?

அதற்குத் தக்காளி எவ்வாறு துணைபுரிந்தது?

விடை சொல்கிறது புதிய ஆய்வு.

பயிரிடப்பட்ட உருளைக்கிழங்குகளின் 450 மரபணுக்களையும் காட்டு உருளைக்கிழங்குகளின் 56 மரபணுக்களையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

9 மில்லியன் ஆண்டுக்கு முன் தென்னமெரிக்காவில்
காட்டுத் தக்காளிச் செடியும், உருளைக்கிழங்கு போன்ற ஒரு செடியும் இயற்கையாய் கலந்ததில் உருவெடுத்தது உருளைக்கிழங்கு.

நிலத்தடியில் ஊட்டச்சத்துகளைச் சேமிக்கும் வடிவத்தைக் கொண்டிருப்பதே இப்போது உருளைக்கிழங்கு என்று பரவலாகக் கூறப்படுகிறது.

தக்காளிச் செடியின் கனியைத் தக்காளியாக உண்கிறோம்.

ஆனால் உருளையில் நிலத்தடியில் விளையும் கிழங்கைச் சாப்பிடுகிறோம்.

கிட்டத்தட்ட 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இவ்விரண்டு செடிகளுக்கு இடையே பொதுவான மரபணுக்கள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

அதனால் இயற்கையாகவே அவை கலந்துவிட்டன.

உருளைக் கிழங்கு விளைச்சலைப் பெருக்கவும், பருவநிலை மாற்றத்தால் பயிர்களுக்கு ஏற்படும் சவால்களைச் சமாளிக்கவும் ஆய்வு முடிவுகள் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்