Skip to main content
உருளைக்கிழங்கு ஆரோக்கியமானதா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

உருளைக்கிழங்கு ஆரோக்கியமானதா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கிழங்குகளில் பலவகை உண்டு...

குறிப்பாகச் சக்கரை வள்ளிக்கிழங்கில் ஆக அதிக ஊட்டச்சத்து இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஆனால் சாதாரண உருளைக்கிழங்குகளும் சலித்தவை அல்ல என்கிறார் ஓர் ஊட்டச்சத்து நிபுணர்.

சாதாரண உருளைக்கிழங்குகள் French fries அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகிய வடிவத்தில் அதிகம் உட்கொள்ளப்படுகின்றன.

அதனாலேயே உருளைக்கிழங்குகளுக்குக் கெட்ட பெயர் என்றார் ஊட்டச்சத்து நிபுணர் டால் கிளீனர் (Tal Kleiner).

அவற்றை ஆரோக்கியமான வகையில் சமைத்தால் நிறைய ஊட்டச்சத்து கிடைக்கும் என்று அவர் சொன்னார்.

உருளைக்கிழங்குகளில் மாவுச்சத்து அதிகம்.

அதனால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது... சுறுசுறுப்பாக இருக்கலாம்.

எனினும் சில உருளைக்கிழங்கு வகைகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும் என்று The New York Times செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதைக் கட்டுப்படுத்த உருளைக்கிழங்கைக் காய்கறிகள், ஏதேனும் புரதச்சத்து வகையுடன் எடுத்துக்கொள்வது சிறந்தது.

உருளைக்கிழங்குகளில் வைட்டமின் சியும் (Vitamin C) அதிகம். அது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுவாக வைத்திருக்க உதவும் என்று The New York Times குறிப்பிட்டது.

உருளைக்கிழங்கின் பலனைப் பெற அதை சுட்டு அல்லது வேகவைத்துச் சாப்பிடுவது சிறந்தது என்று கூறப்படுகிறது.

வெண்ணெய்க்குப் பதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் அதன் ஊட்டச்சத்தின் அளவு பெரிய விகிதம் மாறாமல் இருக்கும்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்