Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

விமானத்தில் வெடித்த power bank - சாதனைத்தைப் பயன்படுத்துவோர் தெரிந்துகொள்ளவேண்டியவை

வாசிப்புநேரம் -

பயணம் செய்யும்போது கைத்தொலைபேசியுடன் பலர் power bank எனும் மின்னூட்டச் சாதனத்தையும் கொண்டு செல்வதுண்டு.

அது பயணங்களுக்கு அத்தியாவசியப் பொருளாகவும் கருதப்படுகிறது.

தைவானிலிருந்து சிங்கப்பூருக்கு வரவிருந்த விமானத்தில், பயணி ஒருவரின் power bank எனும் மின்னூட்டச் சாதனம் தீப்பற்றிக்கொண்டதாக இன்று செய்தி (11 ஜனவரி) வெளியானது.

சாதனத்தின் உரிமையாளருக்கும் அவருடன் பயணம் செய்தவருக்கும் கைவிரல்களில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.

மின்னூட்டச் சாதனத்தை அடிக்கடி பயன்படுத்தும் சிலர் சம்பவம் குறித்து அக்கறை தெரிவித்தனர்.

"இதுவரை நான் மின்னூட்டச் சாதனத்தை விமானத்தில் பயன்படுத்தியதில்லை.  ஆனால் எப்போதும் கொண்டு போவதுண்டு. சாதனத்தைப் பயன்படுத்தினாலும் ஒன்றும் நடக்காது என்றுதான் நினைத்தேன்," 

- பிரதீப்

"இது மிகவும் அதிர்ச்சியான செய்தி. விமானத்தில் எத்தனையோ பேர் சாதனத்தைப் பயன்படுத்துவதுண்டு. இனி அவற்றுக்குத் தடை விதிக்கப்படுமா?"

- அனிதா

விமானங்களுக்குள் மின்னூட்டச் சாதனங்களை எடுத்துச்செல்வதற்குக் கட்டுப்பாடு ஏதும் உண்டா?

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தகவல்படி...

மின்னூட்டச் சாதனங்கள் லித்தியம் (lithium) ரசாயனத்தை மூலப்பொருளாகக் கொண்ட மின்கலன்களாகக் கருதப்படுகின்றன.

அவற்றை விமானத்தில் கொண்டு செல்வதற்கு -

- லித்தியம் 8 கிராமுக்குக் குறைவாக இருக்கவேண்டும் அல்லது அதிகபட்சம் 160 Watt-hour ஆற்றலைக் கொண்டிருக்கவேண்டும். 

- விமானத்தில் கையோடு எடுத்துச் செல்லும் பைகளில் மட்டுமே அவற்றை வைக்கவேண்டும்.

சுருக்கமாகப் பார்க்க
Pixabay

மின்னூட்டச் சாதனத்தை விமானத்தில் கொண்டு செல்லும்போது அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

சாதனங்களில் short circuit எனும் கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க அவற்றை விற்பனைப் பொட்டலங்களிலோ பாதுகாப்பு உறைகளிலோ வைப்பது சிறந்தது. 

சாதனங்களில் மின்கம்பி இணைக்கும் இடங்கள் மீது ஒட்டுவில்லையும் ஒட்டலாம் என்று ஆணையம் குறிப்பிட்டது.

மின்னூட்டச் சாதனங்கள் ஏன் வெடிக்கின்றன?

Mazer மின்சாரச் சாதன உற்பத்தி நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி திரு யாப் விளக்கம் அளித்தார்.

சாதனம் அளவுக்கு அதிகமாகச் சூடாக இருந்திருக்கலாம்...

Pixabay

காரணம்?

- சாதனம் அங்கீகாரம் பெறாத ஒன்றாக இருக்கலாம்.
- சாதனத்தில் இணைக்கப்பட்ட மின்கம்பி அங்கீகாரம் பெறாத ஒன்றாக இருக்கலாம்.
- சாதனம் பல முறை கீழே விழுந்திருக்கலாம். உள்ளமைப்பில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்.

சந்தையில் 20 வெள்ளி முதல் 100 வெள்ளிக்கும் அதிகமான விலையில் சாதனங்கள் விற்கப்படுகின்றன. 

சாதனத்தை விலையின் அடிப்படையில் மட்டும் வாங்கக்கூடாது...

நல்ல மின்னூட்டச் சாதனத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது?

- அது அங்கீகாரம் பெற்றுள்ளதா?
- அதற்கு உத்தரவாதம் உள்ளதா ?
- அதன் உற்பத்தி நிறுவனம் நம்பகமானதா?

என்பதைப் பயனீட்டாளர்கள் ஆராயவேண்டும் என்று திரு யாப் சொன்னார்.

பயனீட்டாளர்களுக்கு மட்டுமில்லாமல் சிங்கப்பூரில் மறுவிற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் பொறுப்பு உண்டு என்று அவர் வலியுறுத்தினார்.

சாதனங்களுக்குப் பலமுறை தரச் சோதனை மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் திரு யாப் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்