Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சீனாவில் பள்ளிப்படிப்பை இடையில் விட்டுப் பல ஆண்டுகள் கழித்து PhD பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பெண்!

வாசிப்புநேரம் -
சீனாவில் பள்ளிப்படிப்பை இடையில் விட்டுப் பல ஆண்டுகள் கழித்து PhD பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பெண்!

pixabay

சீனாவில் ஏழ்மையான குடும்பப் பிண்ணனியின் காரணமாகச் சியௌ சியௌ (Xiaoxiao) பள்ளிப்படிப்பை இடையில் விடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

30 வயதாகும் அவர் சீனாவின் ஹெபேய் (Hebei) மாநிலத்தைச் சேர்ந்தவர்.

சியௌ சியௌ பல வருடங்களாக வெளிநாட்டு ஊழியராய் வேலைசெய்ததாக SCMP செய்தி நிறுவனம் கூறியது.

குடும்பச் சூழ்நிலையைச் சமாளிக்க இளம் வயதில் வேலைசெய்ய முற்பட்ட அவர் பல வருடங்கள் கழித்து தற்போது PhD பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

"என்னைப் போன்று இளம் வயதிலேயே பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு பின்னர் PHD முதுகலைப் பட்டப்படிப்பைப் படிக்கும் ஒருவரை நான் இதுவரை கண்டதில்லை," எனப் பெருமிதத்துடன் கூறினார் சியௌ சியௌ.

2011ஆம் ஆண்டில் தம் வாழ்க்கை மாறியதாக அவர் கூறினார்.

இணையம்வழி ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது zikao எனும் தேர்வை எடுத்துப் படிப்பைப் தொடரலாம் என்பது சியௌ சியௌவுக்குத் தெரியவந்தது.

அதன் பின்னர் அவர் விட்ட படிப்பைத் தொடர்ந்ததாக SCMP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

"வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் இணையம்வழி காணொளிகளைப் பார்ப்பதை விட்டுவிட்டு அதனைப் பயன்படுத்திப் படிப்பது நல்லது,' என சியௌ சியௌ சொன்னார்.

அவரது கதையைப் படித்த இணையவாசிகள் பலர் அவரைப் பாராட்டியுள்ளனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்