Skip to main content
இளவரசி டயானாவைக் காண ஒரு வாய்ப்பு...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

இளவரசி டயானாவைக் காண ஒரு வாய்ப்பு...

வாசிப்புநேரம் -
இளவரசி டயானாவைக் காண ஒரு வாய்ப்பு...
(படம்: Sébastien DUPUY / AFP)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் உள்ள கிரெவின் (Grevin) அருங்காட்சியகத்தில் பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் (Diana) மெழுகுச் சிலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அவரது மெழுகுச் சிலை பிரபல "revenge" ஆடையை அணிந்துள்ளது.

1994ஆம் ஆண்டு முன்னாள் கணவர் இளவரசர் சார்ல்ஸின் (Charles) கள்ளக் காதல் பற்றிய தகவல் வெளியானபோது இளவரசி டயானா அந்தக் கறுப்பு ஆடையைப் பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு அணிந்து வந்தார்.
Related article image
(படம்: Sébastien DUPUY / AFP)
அன்று தான் மனைவிக்கு உண்மையாக இல்லாததைத் தொலைக்காட்சி நேர்காணலில் இளவரசர் சார்ல்ஸ் ஒப்புக்கொண்டார்.

தற்போது மன்னராக உள்ள சார்ல்ஸ், அவரது தாயார் எலிசபெத் (Elizabeth) அரசியார் ஆகியோரின் மெழுகுச் சிலைகள் ஏற்கனவே கிரெவின் அருங்காட்சியகத்தில் உள்ளன.

1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இளவரசி டயானா பாரிஸ் நகரில் நேர்ந்த கார் விபத்தில் மாண்டார்.

சுமார் 28 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் டயானாவின் பிரபலம் குறையவில்லை.

அவரது ஆடை, பாவனை, மனிதாபிமானம், சுதந்திரம் ஆகியவை இன்னும் கொண்டாடப்படுவதாக அருங்காட்சியகம் தெரிவித்தது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்