Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

வேலைச் சோர்வா? மதிய உணவு நேரத்தில் இதயத்துக்கு இதம் தரும் பூனைக்குட்டிகள்...

வாசிப்புநேரம் -

வேலைநேரத்தில் நிபுணர்கள், நிர்வாகிகள், அதிகாரிகளுக்குப் பற்பல கடமைகள் இருக்கின்றன. அவற்றைச் சரிவரச் செய்யும்போது சில நேரங்களில் களைத்துப்போகலாம்; சோர்வடையலாம்.  

அவர்கள் எதிர்நோக்கும் சோர்வுக்குத் தீர்வு?
வேலையிடத்துக்கு அருகிலேயே பூனைகளுடன் நேரம் செலவழிக்க ஓர் இடம், ஒரு திட்டம்...

(படம்: imPAct அமைப்பு)

Purrfect Paws திட்டம்...

விலங்கு வதைத் தடுப்புச் சங்கமும் (SPCA) மக்கள் கழகமும் இணைந்து அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளன. 

அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள 'செய்தி' விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி சங்கரிடமும், imPAct அமைப்புப் பேச்சாளரிடமும் பேசியது...

(படம்: imPAct அமைப்பு)

எங்கு?

மத்திய வர்த்தக வட்டாரத்தில்... மதிய உணவு நேரத்தில் நிபுணர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் எளிதில் செல்லக்கூடிய பகுதியில்...

(படம்: imPAct அமைப்பு)
என்ன இருக்கிறது?

ஓய்வெடுப்பதற்கான இடம், சில எளிய நடவடிக்கைகள், பூனைகளுடன் நேரம் செலவழிப்பதற்கான வசதிகள்...
(படம்: imPAct அமைப்பு)

பாதுகாப்பு எப்படி?

எந்நேரமும் அங்கு 2 ஊழியர்கள் இருப்பார்கள். அவர்கள் அங்கிருக்கும் பூனைகள், மனிதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர். 

மற்ற பூனைகளுடன் சண்டைபோடாத, அமைதியான பூனைகள் மட்டுமே அங்கிருக்கத் தேர்ந்தெடுக்கப்படும்.

ஏன் பூனைகள்?

மனிதர்களைச் சாந்தப்படுத்தும் தன்மை பூனைகளிடம் உண்டு. 

அவற்றுக்கு மனிதர்களுடன் விளையாடப் பிடிக்கும். மனிதர்களுடன் அன்போடு பழகும் பூனைகள் மனச்சோர்வு ஏற்படும் வேளைகளில் ஆறுதலாக இருக்கக்கூடியவை. 

(படம்: imPAct அமைப்பு)

எப்போதிலிருந்து?

வரும் ஜூன் மாதத்திலிருந்து Purrfect Pawsஐச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 
அதற்குச் சிறிய கட்டணம் உள்ளது.

விண்ணப்பம் செய்யவும் மேல்விவரம் பெறவும் www.onepa.gov.sg/cc/impact-hong-lim-green

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்