எதிர்கால உணவு மலைப்பாம்பா?
வாசிப்புநேரம் -
மலைப்பாம்புகள்.
அழகிய தோலுக்காக வளர்க்கப்படுகின்றன.
மலைப்பாம்பின் தோல் வார், பை ஆகியவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் மலைப்பாம்பின் உண்மையான மதிப்பு அதன் இறைச்சியில் இருப்பதாகக் கூறுகின்றனர் சில விஞ்ஞானிகள்.
கால்நடைகளின் கரியமில வாயு வெளியேற்ற அளவு அதிகமாக இருந்தாலும், உலக அளவில் இறைச்சிக்கான தேவை அதிகரிக்கின்றது.
அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய பாம்பு இறைச்சி உதவலாம் எனக் கூறப்படுகிறது.
பாம்புகளால் அதிக வெப்பத்திலும் வறட்சியிலும் உயிர்வாழ முடியும்.
சீக்கிரம் இனப்பெருக்கம் செய்ய முடியும்.
வழக்கமாக உட்கொள்ளப்படும் கால்நடைகளைக் காட்டிலும் அவை விரைவாக வளர்ந்துவிடுகின்றன.
ஏற்கனவே சீனாவிலும் வியட்நாமிலும் சுமார் 4,000 மலைப்பாம்புப் பண்ணைகள் உள்ளன.
இருப்பினும் உலகளவில் பாம்பு இறைச்சியை உட்கொள்ள மக்கள் தயங்குகின்றனர்.
மலைப்பாம்பு இறைச்சிக்கெனச் சந்தை இல்லை என்கிறார் மலைப்பாம்புப் பண்ணை வைத்திருக்கும் எமிலியோ மலுச்சி (Emilio Malucchi).
அதன் சாத்தியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆதாரம் : AFP