குட்டி ரக்கூன்கள் - காட்டில் வாழப் பயிற்சி!
வாசிப்புநேரம் -
படம்: AP Photo/Sophie Bates
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சேற்றில் புரள வேண்டும். மரத்தில் ஏற வேண்டும். நீந்த வேண்டும். உணவைத் தேடவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் மிசிசிப்பியில் (Mississippi) குட்டி ரக்கூன்களுக்கு இப்படியொரு தீவிரப் பயிற்சி முகாம் நடக்கிறது!
உடல்நலம் பாதிக்கப்பட்ட அல்லது காயமடைந்த ரக்கூன்களை வுட்சைட் வனவிலங்கு மீட்பு நிலையம் (Woodside Wildlife Rescue) பராமரிக்கிறது.
தாயைப் பிரிந்த குட்டிகள் காட்டில் வாழத் தேவையான திறன்களையும் இங்கு கற்கின்றன.
மண்ணுக்குள் புழுக்களை மறைத்துவைத்து உணவு தேடக் கற்றுக்கொடுக்கின்றனர்.
ஆழமில்லாத குளங்களில் மீன்பிடிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆபத்து வந்தால் என்ன செய்வது?
ரக்கூன்களின் எச்சரிக்கை ஒலியைப் போல ஊழியர்கள் ஒலி எழுப்புவர்.
உடனே குட்டிகள் மரங்களில் ஏறி ஒளிந்துகொள்ள வேண்டும்!
சூறாவளி ஏற்படக்கூடிய மிசிசிப்பியில் நீச்சலும் முக்கியப் பாடம்.
குட்டிகள் குளத்தில் நீந்தவும், காட்டில் ஆபத்திலிருந்து தப்பிக்கவும் கற்றுக்கொள்கின்றன.
சுமார் ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு வருகிறது பட்டமளிப்பு விழா.
குட்டிகளின் பெயர்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்படும். இசையும் ஒலிக்கும்.
பிறகு அவை காட்டுக்குள் விடப்படுகின்றன.
“பிள்ளைகள் வீட்டைவிட்டுச் செல்வதைப் பார்ப்பதுபோல் இருக்கிறது,” என்கிறார் நிலைய இயக்குநர் ரக்கெல் பிரீஸ்ட் (Raquel Priest).
அடுத்தது? அவை இயற்கையாக இருக்க வேண்டிய குறும்புக்கார ரக்கூன்களாக வாழ்வதுதான்!

ஆதாரம் : AP