Skip to main content
துர்வாடையால் பிரபலமான மலர்... எங்கே?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

துர்வாடையால் பிரபலமான மலர்... எங்கே?

வாசிப்புநேரம் -
பூவாடை என்பது பொதுவாக நல்ல நறுமணத்தைக் குறிக்கும்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் பூத்த புட்ரிஷா (Putricia) எனும் அரிய வகை மலர் நினைத்துப் பார்க்கவே முடியாத துர்வாடையை வீசியது.

ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 20,000 பேர் மலரைப் பார்க்கச் சென்றனர்.

அது மலர்வதை இணையம்வழியும் பல்லாயிரம் பேர் கண்டு ரசித்தனர்.

இதுதான் 15 ஆண்டுகளில் சிட்னி நகரில் முதல் முறையாகப் பூத்திருக்கும் மலர்.

ஐந்தடி உயரத்தில் நிற்கும் இதன் சிறப்பு அது மட்டுமல்ல.

அண்டமுடியாத அளவுக்குப் பிணத்தைப் போன்ற வாடையை வீசுகிறது.

வெப்பமண்டலப் பகுதியில் பூக்கும் புட்ரிஷா அருகிவரும் மலரினத்தைச் சேர்ந்தது.

இது மலரும்போது புட்ரேசீன் எனும் ஒருவகை ரசாயனம் வெளியேறுகிறது.

அதுதான் தாங்கமுடியாத துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

புட்ரிஷாவின் வாடை, வியர்வை சொட்டும் காலுறை, டுரியான் போன்றெல்லாம் இருப்பதாக அதனைப் பார்த்தவர்கள் வருணிக்கின்றனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்