Skip to main content
தயாராக இருக்கும் உணவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் exclusive

தயாராக இருக்கும் உணவு - பசிக்குத் தீர்வு... உடலுக்கு?

வாசிப்புநேரம் -
Ready to Eat Meals அதாவது தயாராக இருக்கும் உணவு.

சிங்கப்பூரின் பரபரப்பான வாழ்க்கைமுறையில் நேரத்தைச் சேமிக்க விரும்புவோருக்கு அது வரப்பிரசாதம் எனலாம்.

சமைக்க நேரமே இல்லை..

இப்படிப் புலம்புவோருக்கு விதவிதமான சுவையில் வகைவகையான உணவு கிடைக்கிறது.

பேரங்காடிகளில் எளிதாகக் கிடைக்கிறது.

விலையும் மலிவுதான்.

ஆனால் ஆரோக்கியமானதா?

அதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்கா செல்வநாதன் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டார்.
 
அளவோடு சாப்பிடுவது முக்கியம்

ஒருவாரத்தில் மூன்று முறை தயாராக இருக்கும் உணவைச் சாப்பிட்டால் அது போதிய அளவாகக் கருதலாம் என்று பிரியங்கா குறிப்பிட்டார்.

அதுவே வாரம் 4 முறைக்குமேல் போனால் ஒருவரின் ஊட்டச்சத்து அளவைப் பெரிதும் பாதிக்கும் என்று அவர் சொன்னார்.

கூடுதல் உணவு வகைகளைச் சேர்க்கலாம்

தயாராக இருக்கும் உணவுப் பொட்டலங்கள் சிறிதாக இருக்கும்.

அதை மட்டுமே சாப்பிட்டால் சிறிது நேரத்தில் பசி வரலாம்.

அதோடு நார்ச்சத்து, புரதத்சத்து உணவு வகைகளைச் சேர்த்துச் சாப்பிடலாம் என்று பிரியங்கா குறிப்பிட்டார்.

இப்படி உட்கொள்வதால் நாம் சாப்பிடும்போது அது சமச்சீரான உணவாக இருப்பதை உறுதிசெய்யலாம் என்றார் அவர்.
கவனிக்கவேண்டிய முக்கிய ஊட்டச்சத்து அளவு?

தயாராக இருக்கும் உணவை வாங்கும்போது அதில் கவனிக்கவேண்டிய 3 முக்கிய அம்சங்கள்:

1) புரதச்சத்து - Per Serving குறைந்தது15g-20 வரை

2) நார்ச்சத்து - Per Serving குறைந்தது 6g-8g வரை

3) சோடியம் - 600mg-700mg வரை இருப்பது நல்லது. 1000mg வரை சென்றால் அதைத் தவிர்ப்பது நல்லது.

Per Serving - ஒரு முறை உட்கொள்ளும் அளவு
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்