Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'முடியாது' , 'இல்லை' என்று ஒருவர் நிராகரிப்பதைச் சகித்துக்கொள்ள உதவும் TikTok போக்கு

வாசிப்புநேரம் -
மனத்தில் ஏதோ தோன்றும்போதெல்லாம்..

'இல்லை அவர் முடியாது என்றுதான் சொல்வார்' என்று எண்ணி நினைத்ததைச் சொல்லாமல் பலர் இருப்பதுண்டு.

நிராகரிப்பை எண்ணி அஞ்சாமல் இருக்க...அதற்குப் பழகிக்கொள்ள உதவும் முயற்சி TikTok தளத்தில் பிரபலமாகிறது.

தெரியாத ஒருவரிடம் சென்று 'எனக்கு 100 டாலர் கடனாகத் தருவீர்களா?'...

'எனக்கு இதை வாங்கித் தருவீர்களா'...

என்று கேட்பது.

கடைக்குச் சென்று 'நானே பானத்தைச் செய்து பார்க்கலாமா?' என்று கேட்பது போன்றவற்றைக் காட்டும் காணொளிகள் பதிவுசெய்யப்படுகின்றன.

காணொளிகளில் பெரும்பாலோர் நிராகரிப்பைச் சந்திக்கின்றனர்.

அத்தகைய காணொளிகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் அதிகம் தயாரிக்கப்படுகின்றன.

TikTok தளத்தின் புதிய போக்கு உண்மையில் நிராகரிப்பு மீதான அச்சத்தைக் குறைக்க உதவலாம் என்று மனநல நிபுணர்கள் CNN செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

சங்கடமான சூழல்களில் எழும் உணர்வுகளை எதிர்கொள்ள அது பயிற்சியாக விளங்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்