Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

"நான் இங்கே, நீ அங்கே" - தூரத்தில் இருக்கும் காதலருக்கு முத்தம் தரவேண்டுமா?

வாசிப்புநேரம் -
"நான் இங்கே, நீ அங்கே" - தூரத்தில் இருக்கும் காதலருக்கு முத்தம் தரவேண்டுமா?

(படம்: Taobao விற்பனைத் தளம்)

தூரத்தில் இருக்கும் காதலருக்கு முத்தம் தரப் புதிய சீனத் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.

சிலிக்கோனால் (silicon) செய்யப்பட்ட உதடுகளைக் கொண்டது அந்தப் புதிய முத்தம்-தரும் சாதனம்.

அதன்மூலம் தூரத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடலாம் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

முத்தத்தின் அழுத்தத்தை உணரக்கூடிய உணர்மென்பொருள் சாதனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

அப்படியே உண்மையான முத்தத்தைப் போன்ற உணர்வை அந்தச் சாதனம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

முத்தத்தை அனுப்ப விரும்புவோர் முதலில் அவர்களது கைத்தொலைபேசிகளில் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யவேண்டும்.

பின்னர் இணையாளருடன் அவர்களது செயலியை இணைத்துக்கொள்ளவேண்டும்.

அதையடுத்து இருவரும் காணொளிச் சந்திப்பைத் தொடங்கி முத்தத்தை அனுப்பலாம்.

அந்தச் சாதனத்தைப் பற்றிய அறிவிப்பு சீனச் சமூக ஊடகப் பயனீட்டாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் அதை ஆபாசமாகக் காண்கின்றனர். இளையர்கள் அதைப் பயன்படுத்தும் ஆபத்துள்ளது என்ற கவலையும் எழுப்பப்பட்டது.

சீனாவின் Changzhou Vocational Institute of Mechatronic Technology கல்வி நிலையம் அந்தச் சாதனத்தை வெளியிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்