Skip to main content
$121 மில்லியனுக்கு விலைபோன ஓவியம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

$121 மில்லியனுக்கு விலைபோன ஓவியம்

வாசிப்புநேரம் -
$121 மில்லியனுக்கு விலைபோன ஓவியம்

(படம்: Chrstie’s)

ரெனே மாக்ரிட் (Rene Magritte) என்ற கலைஞரின் ஓவியம் சுமார் 121 மில்லியன் டாலருக்கு (சுமார் 162 மில்லியன் வெள்ளி) ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

1954ஆம் ஆண்டு வரையப்பட்ட "Empire of Light" என்கிற அந்த ஓவியம் 95 மில்லியன் டாலராக (சுமார் 127 மில்லியன் வெள்ளி) மதிப்பிடப்பட்டிருந்தது.

10 நிமிடத்தில் அது சுமார் 121 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையானது.

இரவு வேளையில் விளக்குக் கம்பத்தின் வெளிச்சத்தில் ஒளிரும் ஒரு வீடு...

வானம் அழகிய நீல நிறம்...

நிழலையும் வெளிச்சத்தையும் எடுத்துக்கூறுகிறது "Empire of Light" ஓவியம்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த மாக்ரிட்டின் ஓவியங்களிலேயே ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் இதுவே.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் Christie's நிறுவனம் ஏலத்தை நடத்தியது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்