Skip to main content
குறுங்காணொளிகளைப் பார்ப்பது மூளையைப் பாதிக்குமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

குறுங்காணொளிகளைப் பார்ப்பது மூளையைப் பாதிக்குமா?

வாசிப்புநேரம் -
TikTok, Instagram, Facebook, X போன்ற செயலிகளில் இடம்பெறும் குறுங்காணொளிகளைத் (short-video clips) தொடர்ச்சியாகப் பார்ப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படுமா?

ஆம் என்று சொல்கின்றனர் ஆய்வாளர்கள்.

சீனாவின் Tianjin Normal பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கலிபோர்னியா (California) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குறுங்காணொளிகளைத் தொடர்ந்து பார்ப்பவர்களின் மூளையின் அமைப்பில் மாற்றங்கள் உண்டாவதாகக் கூறுகின்றனர்.

17 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட 112 பேரின் மூளைகளைப் பரிசோதித்ததில் கவனம் செலுத்துதல், நினைவாற்றல், கற்றல் போன்றவற்றில் அவர்களுக்குக் குறைபாடு உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்ததாக
South Morning China Post செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

மேலும் அவர்களுக்கு மனச்சோர்வும் மனக்கவலையும் இருப்பதும் அடையாளங்காணப்பட்டன.

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால் குறுங்காணொளிகளைக் காணும் பழக்கத்திற்கு அடிமையாவது பெறும் சமூகப் பிரச்சினையாக உருவாகியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியதாக South Morning China Post குறிப்பிட்டது.
 
ஆதாரம் : South China Morning Post

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்