Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

டைனோசரின் 200 காலடித் தடம்

வாசிப்புநேரம் -
டைனோசரின் 200 காலடித் தடம்

படம்: Emma NICHOLLS / OXFORD UNIVERSITY MUSEUM OF NATURAL HISTORY / AFP

பிரிட்டனில் கட்டுமானக் கற்கள் வெட்டியெடுக்கப்படும் இடத்தில் டைனோசரின் 200 காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவை 166 மில்லியன் ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம்.

தென் இங்கிலாந்தின் ஆக்ஸ்பர்ட்ஷைர் (Oxfordshire) தளத்தில் ஐந்து வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றுள் நான்கு மிகப் பெரிய, நீண்ட கழுத்துள்ள தாவரங்களை உண்ணும் டைனோசருடையவை.

அது பெரும்பாலும் 18 மீட்டர் நீளமுள்ள சீட்டியசோரஸ் (Cetiosaurus) டைனோசராக இருக்கலாம்.

ஐந்தாம் வழித்தடம் விலங்குகளை உண்ணும் மெகலசோரஸ் (Megalosaurus) டைனோசருடையதாகத் தெரிகிறது.

அந்த இரு வகைத் தடங்களும் தாவர, விலங்குண்ணி டைனோசர்கள் ஒரே இடத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளன.

நிலம் வழக்கத்துக்கு மாறாகப் புடைத்திருப்பதைப் பார்த்த ஊழியர் ஒருவர் அங்குத் தோண்டியபோது டைனோசரின் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது அங்கு 100க்கும் அதிகமானோர் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்