Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

93 மீட்டர் நீளம், 500 கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் ரொட்டி.. சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில்

வாசிப்புநேரம் -
93 மீட்டர் நீளம், 500 கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் ரொட்டி.. சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில்

(படம்: RWS Website)

சிங்கப்பூரில் ஆக நீளமான 'Dresden Stollen' வகை கிறிஸ்துமஸ் ரொட்டியைத் தயாரித்த Resorts World செந்தோசா, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

ரொட்டியின் நீளம் 93.1 மீட்டர்!

எடை 500 கிலோகிராம்.

கடந்த 3 மாதங்களாகச் சமையல் நிபுணர் ஜூடும் (Jude) அவரது குழுவும் பல மணி நேரம் செலவழித்து அந்த ரொட்டியைத் தயாரித்துள்ளனர்.

சைனாடவுனின் துடிப்பாக முதுமையடையும் நிலையத்தில் உள்ள முதியவர்களுடனும் Food from the Heart அமைப்பைச் சேர்ந்தவர்களுடனும் ரொட்டி
பகிர்ந்து கொள்ளப்பட்டது.

"Resorts World செந்தோசா விழாக்கால உணர்வைப் பிறருக்குக் கொண்டுசேர்ப்பதோடு மட்டுமல்லாமல் பிறர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது," என்றார் அதன் தலைவர்.

கிறிஸ்துமஸ் காலக்கட்டத்தில் Stollen வகை ரொட்டியைப் பலர் விரும்பிச் சாப்பிடுவது வழக்கம்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்