Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சீனாவில் சிறுவயதில் கடத்தப்பட்டவர் 33 ஆண்டுகளுக்குப் பின் தாயுடன் மீண்டும் ஒன்றுசேர்ந்தார்... எப்படி?

சீனாவில் 33 ஆண்டுகளுக்கு முன் 4 வயதுச் சிறுபிள்ளையாக இருந்தபோது கடத்தப்பட்ட ஒருவர், மீண்டும் தம் தாயாருடன் சேர்ந்திருக்கிறார். 

வாசிப்புநேரம் -
சீனாவில் சிறுவயதில் கடத்தப்பட்டவர் 33 ஆண்டுகளுக்குப் பின் தாயுடன் மீண்டும் ஒன்றுசேர்ந்தார்... எப்படி?

படம்: Jimu News / Weibo

சீனாவில் 33 ஆண்டுகளுக்கு முன் 4 வயதுச் சிறுபிள்ளையாக இருந்தபோது கடத்தப்பட்ட ஒருவர், மீண்டும் தம் தாயாருடன் சேர்ந்திருக்கிறார்.

அவரைச் சிறுவர்க் கடத்தல் கும்பல் ஒன்று கடத்தியிருந்தது.

அவர் சிறுவயதில் வாழ்ந்த கிராமத்தின் வரைபடத்தை ஞாபகத்தில் கொண்டு வரைந்தார் லீ ஜிங்வெய் என்ற அந்த ஆடவர்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதியன்று அவர் அந்த வரைபடத்தைக் காணொளி பகிரும் சமூக ஊடகத் தளமான Douyinஇல் பதிவேற்றம் செய்தார்.

அந்தச் சிறு கிராமத்தின் வரைபடத்தைச் சீனக் காவல்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். அதுபற்றி அவருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

மரபணுப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் தாயும் மகனும் மறுபடியும் ஒன்றுசேர்ந்தனர். இருவரும் யுனான் மாநிலத்தில் சந்தித்தனர்.

அவர்கள் சந்தித்தவுடன் திரு லீ அவரது தாயாரின் முகக்கவசத்தை மிகக் கவனத்துடன் அகற்றி அவரது முகத்தைக் கண்டார்.

பின், கண்ணீர் வழிய அவர் தம் தாயாரைக் கட்டி அணைத்தார்...

33 ஆண்டுகளாக அந்தச் சந்திப்புக்காகக் காத்திருந்த அவர், தம் தாயாரைச் சந்திக்க உதவிய அனைவருக்கும் Douyin தளத்தில் நன்றியைத் தெரிவித்தார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்